Skip to main content

பிரியா நடேஸ் குடும்பத்தினரின் மேன்முறையீட்டுக்கு கிடைத்த சிறு வெற்றி!

ஓஸ்திரேலியாவில் தமது ஏதிலிக் கோரிக்கைக்காக கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக போராடும் நடேஸ் பிரியா மற்றும் இரண்டு குழந்தைகள் விடயத்தில் நம்பிக்கை கொடுக்கும் ஓர் தீர்ப்பை அந்நாட்டு உச்சநீதிமன்றம் இன்று வழங்கியது.

கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நடேஸ் எனப்படும் நடேசலிங்கம் 2012ம் ஆண்டும் பிரியா 2013ம் ஆண்டும் இலங்கையில் இருந்து போர் காரணமாக படகில் ஒஸ்திரேலியா சென்றனர்.

இரண்டு பேரும் ஒஸ்திரேலியாவில் திருமணம் செய்து கொண்டு மத்திய குயிஸ்லாந்தின் பிலோய்லா (Biloela) நகரில் வாழ்க்கையை ஆரம்பித்தனர்.

இவர்களுக்கு தற்சமயம் ஒஸ்திரேலியாவில் பிறந்த கோபிகா மற்றும் தருணிகா என்ற முறையே அகவை 4 மற்றும் இரண்டு வயதுடைய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

எனினும் இவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஒஸ்திரேலிய அரசின் பாதுகாப்பு வீசா கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மற்றும் ஃபெப்ரவரி மாதங்களில் காலவதியாகிய நிலையிலும், அந்நாட்டு அரசால் கொண்டுவரப்பட்ட ஏதிலிக் கோரிக்கையாளர்களுக்கு எதிரான இறுக்கமான சட்டங்களில் பிரகாரம், அவர்களது ஏதிலிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

அவர்கள் பிலோய்லாவில் இருந்து மெல்போர்னில் உள்ள தடுப்பு முகாம் ஒன்றிக்கு மாற்றப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களை திருப்பி அனுப்ப வேண்டாம் என்றும், பிலோய்லாவில் மீள வாழ அனுமதிக்குமாறும், அந்நகர மக்கள் மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும், கவனயீர்ப்பு நடவடிக்கைகளிலும் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஓகஸ்ட் 29 நாள் அவர்கள் சிறப்பு விமானம் ஒன்றில் மெல்போனில் இருந்து ஏற்றப்பட்டு நாடுகடத்தப்பட்ட நிலையில், இளைய மகள் தருணிகா சார்பில் சட்டவாளர் ஹரீனா ஃபோர்ட்டினால்
(Carina Ford)  உச்ச நீதிமன்றில் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டை அடுத்து நாடுகடத்தும் உத்தரவு தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விமானம், டார்வின் விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டு அவர்கள் கிறிஸ்மஸ் தீவுக்கு மாற்றப்பட்டனர்.

தொடர்ந்து ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபையால் பிரியா நடேஸ் குடும்பத்தினரை நாடுகடத்த வேண்டாம் என்று ஒஸ்திரேலிய அரசிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று நடுவண் நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கை தொடர்பி;ல் இரண்டு மாதங்களின் பின்னர், இன்று நீதிபதி மார்க் மொஷின்ஸ்கீ (Mark Moshinsky)  வழங்கிய தீர்ப்பில், இளைய மகள் தருணிகாவின் பாதுகாப்பு வீசா விண்ணப்பம், நியாயமான முறையில் கையாளப்படவில்லை என்று தீர்ப்பளித்தார்.

கோவிட்-19 கொறொனா வைரஸ் தொற்றுத் தடுப்புக்கான சமூன இடைவெளி காரணமாக நீதிபதி தொலைத் தொடர்பு வாயிலாக தனது தீர்ப்பை இன்று அறிவித்தார்.

ஓஸ்திரேலியாவி;ல் தற்போதுள்ள சட்ட இறுக்கங்களின் பிரகாரம், படகுகளில் ஒஸ்திரேலியா செல்வோர் பாதுகாப்பு வீசாவுக்கு விண்ணப்பிக்க முடியாது. எனினும் விசேட தேவைகளின் பிரகாரம் உள்துறை மற்றும் குடிவரவு அமைச்சருக்கு பாதுகாப்பு வீசாங்களை வழங்கும் அதிகாரம் உள்ளது.

எனினும் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பம் உரிய முறையால் கையாளப்படவில்லை என்பதே நீதிபதியின் தீர்பாக அமைந்துள்ளது.

Carina Ford
இந்நிலையில் இத்தீர்ப்பு சிறு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக சட்டத்தரணி ஹரீனா ஃபோர்ட் (Carina Ford)  தெரிவித்தார்.

அத்துடன் கிறிஸ்மஸ் தீவில் கடந்த ஓகஸ்ட் முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரியா நடேஸ் குடும்பத்தினருக்கு கொறொனா வைரஸ் தொற்றும் ஆபத்து உள்ளதாகவும், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சூழல் போதுமான சுகாதார பாதுகாப்பு அற்றது என்றும் அவர் கவலை வெளியிட்டார்.

இந்நிலையில் அக்குடும்பத்தினரை மீண்டும் பிலோய்லாவில் வாழ அனுமதிக்க வேண்டும் என்றும் குடிவரவுத் துறை அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

ஓன்டாரியோவில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

ஓன்டாரியோவில் கோவிட்-19 கொறோனா நுன்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இன்று மீண்டும் அதிகரிப்பு நிலை பதிவாகியது. இன்றைய தினம் புதிதாக 511 தொற்றுக்களும் 55 இழப்புக்களும் பதிவாகியது. இந்நிலையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 17119 ஆகவும் இவர்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1249 ஆகவும் உயர்வடைந்தது. நேற்றைய தினம் 421 தொற்றுக்களும், 39 இழப்புக்களும் பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் இந்த அதிகரிப்பு நிலை காணப்படுகிறது. நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கோவிட்19 தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது. ஒன்டாரியோவில் உள்ள 910 நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் கடந்த 24 நேரத்தில் சுமார் 49 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த இல்லங்களில் இருந்து 167 புதிய தொற்றுக்களும் பதிவாகியுள்ளன. அத்துடன், கோவிட்19 தொற்றிற்கு உள்ளானவர்கள் இனம் காணப்பட்டவர்களில் இதுவரை 11,390 பேர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒன்டாரியோவி...