Skip to main content

15 ஆண்டுகால கிறிக்கட் வாழ்வில் இருந்து ஓய்வு பெற்றார் சனா மிர்

பக்கிஸ்தான் மகளிர் கிறிக்கெட் அணியின் முன்னாள் தலைவியான Sana Mir(அகவை 34), அனைத்துப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

From @ Sana Mir Twitter
2005ஆம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான மிர், ஓர் வலது கை சுழற்பந்து வீச்சாளராவார்.
அவரின் கடந்த 15 ஆண்டுகால அவரின் கிறிக்கெட் பயணத்தில், இதுவரை 226 போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவற்றில் 137 போட்டிகளுக்கு அவர் தலைமைத்துவம் வகித்துள்ளார்.

72 ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கு தலைமை தாங்கியுள்ளார். 26 போட்டிகளில் வெற்றியையும், 45 போட்டிகளில் தோல்வியையும் பக்கிஸ்தான் மகளீர் அணி பதிவுசெய்துள்ளது.

மேலும், 65 ரி-20 போட்டிகளுக்கு தலைமை தாங்கியுள்ளார். இதில் 26 போட்டிகளில் வெற்றியையும், 36 போட்டிகளில் தோல்வியையும் பதிவு செய்துள்ளது.

120 ஒருநாள் போட்டிகளில் பந்து வீசியுள்ள அவர், 151 விக்கெட்டுகளையும், 106 ரி-20 போட்டிகளில் விளையாடி 89 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார்.
ஒரு நாள் போட்டிகளில் அவர் 1630 ஓட்டங்களைப் பெற்றுள்ளதன் மூலம், பக்கிஸ்தானில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற மகளீர் கிறிக்கட் ஆட்டக்காரர்களின் வரிசையில் மூன்றாவது நிலையில் காணப்படுகின்றார்.

மேலும், இவரது தலைமைத்துவக் காலத்தில் பக்கிஸ்தான் மகளீர் கிறிக்கட் அணி முறையே, 2013, 2017-ம் ஆண்டுகளில் இரண்டு உலகக்கிண்ணத் தொடரை சந்தித்த போதும், வெற்றியீட்டவில்லை.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

ஓன்டாரியோவில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

ஓன்டாரியோவில் கோவிட்-19 கொறோனா நுன்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இன்று மீண்டும் அதிகரிப்பு நிலை பதிவாகியது. இன்றைய தினம் புதிதாக 511 தொற்றுக்களும் 55 இழப்புக்களும் பதிவாகியது. இந்நிலையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 17119 ஆகவும் இவர்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1249 ஆகவும் உயர்வடைந்தது. நேற்றைய தினம் 421 தொற்றுக்களும், 39 இழப்புக்களும் பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் இந்த அதிகரிப்பு நிலை காணப்படுகிறது. நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கோவிட்19 தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது. ஒன்டாரியோவில் உள்ள 910 நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் கடந்த 24 நேரத்தில் சுமார் 49 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த இல்லங்களில் இருந்து 167 புதிய தொற்றுக்களும் பதிவாகியுள்ளன. அத்துடன், கோவிட்19 தொற்றிற்கு உள்ளானவர்கள் இனம் காணப்பட்டவர்களில் இதுவரை 11,390 பேர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒன்டாரியோவி...