Skip to main content

கோவிட்-19 ஸ்ரீலங்கா: தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் ஊரடங்கு!

ஸ்ரீலங்காவில் காவற்துறை ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள 21 மாவட்டங்களிலும் இன்று வியாழக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை, மீண்டும் காவற்துறை ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வருகிறது.

கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றை கட்டுப்படுத்தும் வண்ணம் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பின்னர், அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்ட கொழும்பு, கம்பஹா, புத்தளம், களுத்துறை தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களிலும் காலை 5 மணிமுதல் இரவு எட்டு மணிவரை ஊரடங்கு தளர்த்தப்படும் நடைமுறை கொண்டுவரப்பட்டது.

எனினும் நாளை வெள்ளிகிழமை மே 01ம் நாள் தொழிலாளர் தின ஒன்று கூடல்களை தடுக்கும் வண்ணம் அமுலுக்கு கொண்டு வரப்படும் காவற்துறை ஊரடங்குச்சட்டம், திங்கட்கிழமை வரை நீடிக்கின்றது.

ஸ்ரீலங்காவில் இதுவரை 649 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், இவர்களில் ஏழு பேர் மரணித்தும் உள்ளனர்.

இதேவேளை, கடற்படையினர் 226 பேருக்குக் கொறோனா தொற்றியமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா கூறியுள்ளார்.

தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் மூன்று பேர் வெலிசறை கடற்படைத் தளத்தைச் சேர்ந்த கடற்படையினரெனவும், இதையடுத்து அந்தக் கடற்படைத் தளத்தில் கொறோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

விடுமுறையில் இருந்த 79 கடற்படையினருக்கும் கொறோனா தொற்றியமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Lawyer Visvalingam Manivannan
இதேவேளை, மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைப்பது சமூகத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துமெனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வழக்கறிஞர் விஸ்வலிங்கம் மணிவண்ணண் கூறியுள்ளார்.

மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டால், சமூகத்தில் தொற்றுப் பரவும் ஆபத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், பள்ளிக்கூடங்களை தனிமைப்படுத்தல் நிலையங்களாகப் பயன்படுத்தப்பட மாட்டாவெனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

ஓன்டாரியோவில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

ஓன்டாரியோவில் கோவிட்-19 கொறோனா நுன்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இன்று மீண்டும் அதிகரிப்பு நிலை பதிவாகியது. இன்றைய தினம் புதிதாக 511 தொற்றுக்களும் 55 இழப்புக்களும் பதிவாகியது. இந்நிலையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 17119 ஆகவும் இவர்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1249 ஆகவும் உயர்வடைந்தது. நேற்றைய தினம் 421 தொற்றுக்களும், 39 இழப்புக்களும் பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் இந்த அதிகரிப்பு நிலை காணப்படுகிறது. நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கோவிட்19 தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது. ஒன்டாரியோவில் உள்ள 910 நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் கடந்த 24 நேரத்தில் சுமார் 49 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த இல்லங்களில் இருந்து 167 புதிய தொற்றுக்களும் பதிவாகியுள்ளன. அத்துடன், கோவிட்19 தொற்றிற்கு உள்ளானவர்கள் இனம் காணப்பட்டவர்களில் இதுவரை 11,390 பேர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒன்டாரியோவி...