காணாமற்போயிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை உறுப்பினர் இலகுநாதன் செந்தூரன் (அகவை 37) உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காணமற் போயிருந்தவரை தேடிக்கண்டு பிடிக்கும் பணியில் தீவிரமாக அக்கட்சியினரும் நண்பர்களும் ஈடுபட்டிருந்த நிலையில், அவரது உந்துருளி, அடையாள அட்டைகள் மற்றும் செல்லிடப்பேசி என்பன தொண்டமானாறு மலியதனை மயானத்தை அண்டிய பகுதியில் நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டு காவற்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை அவரது உடலம் தொண்டமானாறு கடற்கரையில் வல்வெட்டித்துறைக் காவற்துறையால் மீட்கப்பட்டது.
கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றைக் கட்டுப்படுத்தும் வண்ணம் யாழ்ப்பாணத்தில் காவற்துறை ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்த காலத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் முன்னெடுக்கப்பட்ட உணவு வழங்கல் உள்ளிட்ட நிவாரண நடவடிக்கையில், செந்தூரன் முன்னணியில் நின்று செயற்பட்ட ஒருவர் என்று குறிப்பிட்டுள்ள அக்கட்சியின் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஸ், இது ஓர் ஏற்க முடியாத பேரிழப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை, செந்தூரன் அகலாமரணம் அடைந்துள்ளார் என்று அக்கட்சியின் ஊடாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
காணமற் போயிருந்தவரை தேடிக்கண்டு பிடிக்கும் பணியில் தீவிரமாக அக்கட்சியினரும் நண்பர்களும் ஈடுபட்டிருந்த நிலையில், அவரது உந்துருளி, அடையாள அட்டைகள் மற்றும் செல்லிடப்பேசி என்பன தொண்டமானாறு மலியதனை மயானத்தை அண்டிய பகுதியில் நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டு காவற்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை அவரது உடலம் தொண்டமானாறு கடற்கரையில் வல்வெட்டித்துறைக் காவற்துறையால் மீட்கப்பட்டது.
கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றைக் கட்டுப்படுத்தும் வண்ணம் யாழ்ப்பாணத்தில் காவற்துறை ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்த காலத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் முன்னெடுக்கப்பட்ட உணவு வழங்கல் உள்ளிட்ட நிவாரண நடவடிக்கையில், செந்தூரன் முன்னணியில் நின்று செயற்பட்ட ஒருவர் என்று குறிப்பிட்டுள்ள அக்கட்சியின் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஸ், இது ஓர் ஏற்க முடியாத பேரிழப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.இதேவேளை, செந்தூரன் அகலாமரணம் அடைந்துள்ளார் என்று அக்கட்சியின் ஊடாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Comments
Post a Comment