Skip to main content

15ம் ஆண்டில் நினைவு கூரப்படும் ஊடகவியலாளர் தராக்கி சிவராம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராம் என்று அறியப்பட்ட மாமனிதர் தர்மரெட்ணம் சிவராமின் 15-வது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

கோவிட்-19 கொறோனா நுண்மித் தாக்கத்தால் தாயகத்திலும், புலம் பெயர் தேசங்களிலும் தமிழ் ஊடகத்தினரும், மனித நேயச் செயற்பாட்டாளர்களும் முடக்கம் அடைந்துள்ள நிலையில், மாமனிதர் தராக்கி சிவராம் அமைதியாக நினைவு கூரப்படுகிறார்.

2005ம் ஆண்டு ஏப்ரல் 28ம் நாள் வியாழக்கிழமை இரவு 10.30 அளவில், கொழும்பு பம்பலப்பிட்டி காவற்துறை நிலையத்துக்கு முன்பாக வைத்து வெள்ளைவானில் கடத்தப்பட்ட மூத்த ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் உடல், மறுநாள் காலை ஸ்ரீலங்காவின் அதியுயர் பாதுகாப்பு வலயமாக நடாளுமன்றின் பின்புறமாகவுள்ள வீதியோரத்தில் கண்டு பிடிக்கப்பட்டது.

உடலில் பலத்த இரத்தக் காயங்களுடன் காணப்பட்ட அவரது உடலை, சக ஊடகவியலாளர்களும், அவரது குடும்பத்தினரும் அடையாளம் காண்பித்தனர்.

இப்படுகொலை இடம்பெற்று 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இப்படுகொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

1959ம் ஆண்டு ஓகஸ்ட் 11ம் நாள் மட்டக்களப்பில் பிறந்த தர்மரெட்ணம் சிவராம், பின்னர் ஊடகத்துறையில் தராக்கி என்ற பெயரில் நன்கு அறியப்பட்டார்.

தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தில் இவரின் இராணுவ புலனாய்வுகள் குறித்த கட்டுரைகள், தீர்க்க தரிசனமாக அமைந்தது.

விடுதலைப் போராட்டங்கள் தொடர்பாகவும், அரசியல் ஆய்வுகளையும், தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியது மட்டும் அன்றி, காலத்தின் தேவைக்கு ஏற்றாற் போல், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நியாதிக்கத் தேவையை மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் நன்கு உணர்த்தியவர், தராக்கி சிவராம்.

"The rights we enjoy today aren't earned by speaking, we earned them by fighting", அதாவது நாம் இன்று அனுபவிக்கும் உரிமைகள் அனைத்துமே பேசிப் பெற்றவையல்ல, அடித்துப் பெற்றவையே என்று
2005ம் ஆண்டு காலப்பகுதியில் தினக்குரலுக்கு எழுதிய ஓர் கட்டுரையில் தராக்கி சிவராம் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஊடகர்கள் கொல்லப்படலாம் இடப்பெயர்வுக்கு தள்ளப்படலாம் ஆனால் அவர்களால் வெளிக்கொண்டுவரப்பட்டவை என்றும் அழியாது, காலத்தின் தேவையாய் அவை வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும்.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.