ஒன்றாரியோவில் கோவிட் 19 கட்டுப்பாட்டில்..
ஒன்றாரியோவில் இன்று 399 புதிய தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அத்தோடு கடந்த 24 மணிநேரத்தில் இத்தொற்றுக் காரணமாக 48 பேர் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய தொற்று எண்ணிக்கையோடு ஒன்ராறியோவின் மொத்த தொற்று எண்ணிக்கை 19 ஆயிரத்தைக் (19,121) கடந்துள்ளது.
நேற்று பதிவான 412 தொற்றுகளில் இருந்து இன்று சற்று குறைந்திருந்தாலும் இந்த குறைவு மகிழ்ச்சியை தரும் வகையில் இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 24 மணிநேரத்தில் 347 பேர் இந்த நோயின் தாக்கத்திலிருந்து மீண்டுள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.
இதுவரை இத்தொற்றில் இருந்து 13 ஆயிரத்து 569 பேர் முற்றிலும் குணமடைந்துள்ளனர். இது நோயினால் பாதிக்கப் பட்டோரின் 71 சதவீதமாகும். இத்தொற்று காரணமாக 20 முதல் 39 வயதுக்குட்பட்டோர் 7 பேர் இறந்துள்ளனர். ஆயிரத்துக்கு மேற்பட்ட இறப்புகள் நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் நிகழ்ந்துள்ளன.
நாளொன்று 16 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்வது என்ற மாகாண அரசின் இலக்கு கடந்த மூன்று நாட்களாக மேற்கொள்ளப் பட்டிருக்காவிடினும், இன்று 15,179 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஒன்றாரியோவில் தொற்றுக்காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1545 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment