Skip to main content

ஒன்றாரியோவில் கோவிட் 19 மீண்டும் உயர்வு – காரணம் கட்டுப்பாடுகளின் தளர்வா?

ஒன்றாரியோவில் கோவிட் 19 மீண்டும் உயர்வு – காரணம் கட்டுப்பாடுகளின் தளர்வா? 


ஒன்றாரியோவில் இன்று 361 புதிய தொற்றுகள் பதிவாகி உள்ளன. நேற்று 308 தொற்றுகள் பதிவாகியிருந்தன.  

கடந்த ஆறு வாரங்களில் முதல்முறையாகச் சரிவைச் சந்தித்துவரும் இந்த நாட்களில் தொற்று எண்ணிக்கை ஏறுவதுவும் இறங்குவதுவுமாக இருந்து வருகின்றது. 

கடந்த 24 மணி நேரத்தில் தொற்றுக் காரணமாக 56 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இத்தோடு உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 1776 ஆகும்.


இந்த நோய் படிப்படியாகக் குறைத்து செல்வது எளிதான காரியம் அல்ல, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருக்கின்றன. இவை சிலவேளை தொற்று எண்ணிக்கை உயர்வை அதிகரிக்கலாம். கணிசமான அளவு நோய் அதிகரிப்பு அவதானிக்கப்பட்டால் மீண்டும் நாம் கட்டுப்பாடுகளை இறுக்க வேண்டிய நிலை ஏற்படலாம்' எனத் தொற்றுநோய் மருத்துவர் ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.

கடந்த வாரத்தில் சராசரியாக 378 புதிய தொற்றுகள் காணப்பட்டுள்ளன. இது நம்பிக்கையளிப்பதாகக் கூறப்படுகின்றது. 

தொற்று நோய் தொடர்பான சோதனை 19,577 என்ற உச்சத்தில் இருந்து குறைவடைய தொடங்கியிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 11 ஆயிரத்து 979 பேர் மட்டுமே சோதனை மேற்கொண்டிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை வீழ்ச்சி, கொரோனா ஒன்றாரியோவில் குறைவடைந்து வருகின்றது என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு என்கின்றனர். 

சுகாதாரப் பணியாளர்களிடையே இப்போது 3,485 தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இது மொத்த எண்ணிக்கையில் 16 சதவீதத்திற்கும் அதிகமாகும்.

ரொரன்ரோ பெரும்பாகத்தில் மட்டும் 62.1 வீதமான தொற்றுகள் உள்ளன. 
மருத்துவமனைகளில் 73 தொற்றுகள் பதிவாகியுள்ளன. 
தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து மொத்தம் 2,650 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இது மொத்த எண்ணிக்கையில் 12.7 சதவீதமாகும்.

20 முதல் 39 வயதிற்குட்பட்டவர்களில் ஏழு இறப்புகள் பதிவாகியுள்ளன, 19 வயதிற்குட்பட்டவர்களில் எந்த இறப்புகளும் பதிவாகவில்லை.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

ஓன்டாரியோவில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

ஓன்டாரியோவில் கோவிட்-19 கொறோனா நுன்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இன்று மீண்டும் அதிகரிப்பு நிலை பதிவாகியது. இன்றைய தினம் புதிதாக 511 தொற்றுக்களும் 55 இழப்புக்களும் பதிவாகியது. இந்நிலையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 17119 ஆகவும் இவர்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1249 ஆகவும் உயர்வடைந்தது. நேற்றைய தினம் 421 தொற்றுக்களும், 39 இழப்புக்களும் பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் இந்த அதிகரிப்பு நிலை காணப்படுகிறது. நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கோவிட்19 தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது. ஒன்டாரியோவில் உள்ள 910 நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் கடந்த 24 நேரத்தில் சுமார் 49 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த இல்லங்களில் இருந்து 167 புதிய தொற்றுக்களும் பதிவாகியுள்ளன. அத்துடன், கோவிட்19 தொற்றிற்கு உள்ளானவர்கள் இனம் காணப்பட்டவர்களில் இதுவரை 11,390 பேர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒன்டாரியோவி...