கனடா அமெரிக்கா எல்லை யூன் 21ம் திகதிவரை மூடப்பட்டிருக்கும்
![]() |
கனடா அமெரிக்கா எல்லை தொடர்ந்து யூன் 21ம் திகதிவரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகளை முன்னிட்ட பாரவூர்திகள் உள்ளிட்ட பயணங்கள் தொடரும் அதேவேளை அத்தியாவசியமற்ற அனைத்துப் பயணங்களும் யூன் 21 வரை தடை செய்யப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் 20 திகதி மூடப்பட்டிருந்த எல்லை மே 21 திறக்கப்படலாம் என எதிர்பார்ப்புகள் வெளியாகியிருந்தன.
எல்லையைத் திறக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment