நேற்றைய எண்ணிக்கைக் கணிப்பில் தவறு? இன்றைய அதிகரிப்பு 428
![]() |
| Add caption |
நேற்று வெளியான 258 என்ற கோவிட் 19 தொற்று எண்ணிக்கை தவது என ஒன்றாரியோ நலத்துறை அமைச்சு அறிவித்திருக்கின்றது. 87 புதிய தொற்றுகள் நேற்றைய எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை. நேற்றைய சரியான எண்ணிக்கை 345 ஆகும்.
இன்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட தொற்று எண்ணிக்கை 341 ஆகும். இத்துடன் நேற்றுத் தவறவிடப்பட்ட 87 என்ற எண்ணிக்கையையும் சேர்த்து 428 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வெளியான எண்ணிக்கை நம்பிக்கையைத் தூண்டுவதாக இருந்தது. விரைவில் மக்கள் வழமைக்குத் திரும்பலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்த எண்ணிக்கைத் தவறு சற்று பின்னடைவையே காட்டுகின்றது.
கடந்த வாரத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 339 புதிய தொற்றுகள்; மாகாணத்தில் பதிவாகியுள்ளன. கடந்த இரண்டு நாட்களும் நம்பிக்கை தரும் வீழ்ச்சியைக் காட்டவில்லை.
கடந்த 24 மணி நேரத்தில் 27 மரணங்கள் பதிவாகியுள்ளன. இறப்பு எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்ராறியோ மாகாணத்தில் இதுவரை 1>825 பேர் இறந்துள்ளனர்.
மாகாணத்தில் உறுதிப்படுத்தப்பட்ட 21>922 தொற்றுகளில் கிட்டத்தட்ட 76 சதவீத நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

Comments
Post a Comment