Skip to main content

ஒன்ராறியோவில் தொற்று எண்ணிக்கை மீண்டும் குறைந்தது.

தொற்று எண்ணிக்கை இன்று மீண்டும் குறைந்தது. 

இன்று புதிதாகத் தொற்றுகளுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 421 என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய எண்ணிக்கையை விட இது குறைவானதாகும். இத்துடன் ஒன்ராறியோவில் பாதிக்கப்பட்டவர்களி;ன் எண்ணி;க்கை 16,608 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 39 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஆகக் கூடிய எண்ணிகையாக 89 இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டிருந்தன.

தொற்றுக்கு ஆளான நோயாளிகளில் மூன்றில் இரண்டு பங்கினர் குணமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை 10,825 நோயாளர்கள் குணமாகியுள்ளனர். குணமடைவோர் வீதம் அதிகரித்து வருவது மகிழ்ச்சி தருவதாக மருத்துவத் தரப்பு தெரிவித்துள்ளது. நேற்று மட்டும் 620 பேர் குணமடைந்துள்ளனர்.

நோய்த்தொற்றின் பரவல் குறைவடைவதை நாம் அவதானிக்கின்றோம். மீண்டும் வழமையான வாழ்வுக்குத் திருப்புவதை நாம் நெருங்கிச் செல்கின்றோம் என இன்று ஒன்ராறியோ முதல்வர் தெரிவித்துள்ளார்.

மாகாணத்தில் கொரோனா தொற்நுக் காரணமாக இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 1,121 பேரில் 56 பேரைத் தவிர மற்ற அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், அவர்களில் 774 பேர் 80 வயதைக் கடந்தவர்கள்.

மாகாணத்தின் நீண்டகால பராமரிப்பு மையங்களில் 198 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒன்ராறியோவில் 2,400 க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்தப் பாதிப்பில் 60 சதவீதம் ரொரன்ரோ பெரும்பாகத்தில் இடம்பெற்றுள்ளது.

மருத்துவமனைகளில் வெள்ளிக்கிழமை கணிப்பின்படி 1,017 அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 225 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

ஓன்டாரியோவில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

ஓன்டாரியோவில் கோவிட்-19 கொறோனா நுன்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இன்று மீண்டும் அதிகரிப்பு நிலை பதிவாகியது. இன்றைய தினம் புதிதாக 511 தொற்றுக்களும் 55 இழப்புக்களும் பதிவாகியது. இந்நிலையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 17119 ஆகவும் இவர்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1249 ஆகவும் உயர்வடைந்தது. நேற்றைய தினம் 421 தொற்றுக்களும், 39 இழப்புக்களும் பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் இந்த அதிகரிப்பு நிலை காணப்படுகிறது. நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கோவிட்19 தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது. ஒன்டாரியோவில் உள்ள 910 நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் கடந்த 24 நேரத்தில் சுமார் 49 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த இல்லங்களில் இருந்து 167 புதிய தொற்றுக்களும் பதிவாகியுள்ளன. அத்துடன், கோவிட்19 தொற்றிற்கு உள்ளானவர்கள் இனம் காணப்பட்டவர்களில் இதுவரை 11,390 பேர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒன்டாரியோவி...