Skip to main content

ஒன்றாரியோவில் சில வணிக நிறுவனங்கள் திங்கள் திறப்பு




ஒன்றாரியோவில் சில வணிக நிறுவனங்கள்  திங்கள் திறப்பு

வரையறுக்கப்பட்ட வணிக மையங்கள் பலவற்றை மே 4ம் திகதி திங்கட்கிழமை திறப்பதற்கு மாகாண அரசு அனுமதித்துள்ளது.

விவசாயம், பூமரங்கள் தொடர்பான வணிகங்கள், புல்வெளி; பராமரிப்பு நிறுவனங்கள்; வாகன விற்பனை மையங்கள் உட்பட பல வணிக மையங்கள் திங்கட்கிழமை முதல் திறக்கப்படுகின்றன.

இன்று இந்த அறிபிப்பை  ஒன்றாரியோ முதல்வர் டக் போர்ட் வெளியிட்டார்.

"நோய் தொடர்பில் நாம் கையாண்டு வரும் நடவடிக்கைகளின் அடிப்படையிலும் எங்களிக் பலமான மருத்துவத்துறை, சமூக நலத்துறை சார்ந்த செயற்பாடுகளிலும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களின் அடிப்படையிலும் நாம் பாதுகாப்பாக இயங்க முடியும் என நம்புகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்களும் பணியாளர்களும் நெருக்க இடைவெளிகளைப் பேணுதல் வேண்டும். கையுறை சுவாசத் தடுப்புக் கவசம் போன்றவற்றைத் தொடர்ந்து அணிந்திருத்தல் வேண்டும். இவற்றைக் ககடைப்பிடித்தால் தொடுகை மூலம் தொடர்பற்ற சேவைகளை தொடர்ந்து வழங்க முடியும். எனவும் குறிப்பிட்டுள்ளார்.


அத்தியாவசிய கட்டுமானப் பணிகளின் பட்டியலையும் மாகாணம் விரிவுபடுத்தியுள்ளது, இதில் இப்போது நகராட்சி திட்டங்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், குழந்தை பராமரிப்பு மையங்கள், பள்ளிகள் போன்றவற்றின் கட்டுமானப் பணிகளை இனி முன்னெடுக்கலாம். கோல்ஃப் மைதானங்கள், விளையாட்டுத் திடல்கள் எதிர்வரும் கோடைகாலத்தில் திறக்க அனுமதிக்கப்படும்.

ஒன்ராறியோவின் சுகாதாரத்தின் தலைமை மருத்துவ அதிகாரியுடன் கலந்தாலோசித்த பின்னரே திறக்கக்கூடிய புதிய வணிகங்களின் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

திறக்கப்படவிருக்கும் வணிக நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்கள் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

ஓன்டாரியோவில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

ஓன்டாரியோவில் கோவிட்-19 கொறோனா நுன்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இன்று மீண்டும் அதிகரிப்பு நிலை பதிவாகியது. இன்றைய தினம் புதிதாக 511 தொற்றுக்களும் 55 இழப்புக்களும் பதிவாகியது. இந்நிலையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 17119 ஆகவும் இவர்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1249 ஆகவும் உயர்வடைந்தது. நேற்றைய தினம் 421 தொற்றுக்களும், 39 இழப்புக்களும் பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் இந்த அதிகரிப்பு நிலை காணப்படுகிறது. நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கோவிட்19 தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது. ஒன்டாரியோவில் உள்ள 910 நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் கடந்த 24 நேரத்தில் சுமார் 49 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த இல்லங்களில் இருந்து 167 புதிய தொற்றுக்களும் பதிவாகியுள்ளன. அத்துடன், கோவிட்19 தொற்றிற்கு உள்ளானவர்கள் இனம் காணப்பட்டவர்களில் இதுவரை 11,390 பேர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒன்டாரியோவி...