Skip to main content

இலங்கை தொழிலாளர் கொங்கிரசின் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான காலமானார்.



இலங்கை தொழிலாளர் கொங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், இன்று தனது 55-வது அகவையில் தலங்கமா மருத்துவமனையில் காலமானார்.

மாரடைப்பு ஏற்பட்ட வேளையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், எனினும் பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.



இன்று பகல் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் Gopal Baglay
ஐ கொழும்பில் சந்தித்து மலையக மக்களுக்கான பத்தாயிரம் வீட்டுத் திட்டம் பற்றி உரையாடியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அரசுத் தலைவர் கோட்டபாயவுடனும் சந்திப்பு நிறைவு செய்து, வீடு திரும்பும் வழியிலேயே அவர் சுகவீனமுற்றதாக தெரியவருகிறது.

சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளை துணிகரமாக தீர்க்கக் கூடிய அதிகாரம் கொண்ட அரசுத் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்த அவர், கோட்டபாய ராஜபக்சவுக்கு கடந்த தேர்தலில் ஆதரவை வழங்கினார்.

தொடர்ந்து கோட்டபாய ராஜபக்சவின் அரசில், தோட்ட உட்கட்டமைப்பு சமூக வலுவூட்டல் அமைச்சராக பதவி வகித்து வந்தார்.

காலம் சென்ற ஆறுமுகன் தொண்டமான், முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் கொங்கிரசின் முன்னாள் தலைவருமான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரனுமாவார்.

1964ஆம் ஆண்டு பிறந்த ஆறுமுகன் தொண்டமான் கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி பயின்றார். 

1990ஆம் ஆண்டு  இலங்கை தொழிலாளர் கொங்கிரஸினூடாக அரசியலுக்குள் பிரவேசித்த அவர், 1993ஆம் ஆண்டு அக்கட்சியின் நிதிச் செயலாளராகவும், பின்னர் 1994 இல் பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார்.


1994ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்து போட்டியிட்ட அவர், அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.

தொடர்ந்து வந்த அரசாங்கங்களில், பல அமைச்சுப் பொறுப்புக்களையும் வகித்துள்ளார்.


Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

ஓன்டாரியோவில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

ஓன்டாரியோவில் கோவிட்-19 கொறோனா நுன்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இன்று மீண்டும் அதிகரிப்பு நிலை பதிவாகியது. இன்றைய தினம் புதிதாக 511 தொற்றுக்களும் 55 இழப்புக்களும் பதிவாகியது. இந்நிலையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 17119 ஆகவும் இவர்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1249 ஆகவும் உயர்வடைந்தது. நேற்றைய தினம் 421 தொற்றுக்களும், 39 இழப்புக்களும் பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் இந்த அதிகரிப்பு நிலை காணப்படுகிறது. நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கோவிட்19 தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது. ஒன்டாரியோவில் உள்ள 910 நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் கடந்த 24 நேரத்தில் சுமார் 49 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த இல்லங்களில் இருந்து 167 புதிய தொற்றுக்களும் பதிவாகியுள்ளன. அத்துடன், கோவிட்19 தொற்றிற்கு உள்ளானவர்கள் இனம் காணப்பட்டவர்களில் இதுவரை 11,390 பேர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒன்டாரியோவி...