Skip to main content

தொற்று எண்ணிக்கையில் வீழ்ச்சி - ஒன்ராறியோ மீள்கின்றதா?

தொற்று எண்ணிக்கையில் வீழ்ச்சி - ஒன்ராறியோ மீள்கின்றதா? 

COVID-19

கடந்த ஒரு மாதத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. இன்று 346 புதிய தொற்றுகள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 6ம் திகதி பதிவான 306 என்ற எண்ணிக்கையை அடுத்து இதுவே குறைவான எண்ணிக்கையாகக் கொணப்படுகின்றது. இந்த அதிகரிப்பைத் தொடந்து ஒன்ராறியோவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20000த்தை அண்மித்துள்ளது (19,944). 

கடந்த 24 மணிநேரத்தில் 59 பேர் இத்தொற்றுக் காரணமாக இறந்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஒன்றாரியோவின் மொத்த இறப்பு 1,599 ஆக உயர்ந்துள்ளது. 
நாளாந்த அதிகரிப்பு வீதம் குறைவடையும் அதே நேரத்தில் இறப்பு வீதம் அதிகரித்துச் செல்வதாகக் கூறப்படுகின்றது. ஏற்கனவே அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டவர்களே இறப்புக்கு உள்ளாகி வருகின்றனர். மருத்துவமனைகளில் 1,016 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தொகையும் வீழ்ச்சியடைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

நேற்றைய நாள் சாதனையளவாக 19,277 பேர் பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டனர். இது ஒரேநாளில் 3000மாக அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 
நேற்று வெளியாகியிருந்த 477 என்ற எண்ணிக்கை சற்றுக் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்ததாகத் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் டேவிட் வில்லியம்ஸ் தெரிவித்திருந்தார். மேற்கொள்ளப்பட்ட தடுப்புப் பணிகள் குறித்த ஐயமும் எழுந்ததாகக் கூறியிருந்தார். 

“நாங்கள் தொடர்ந்து போராட வேண்டும். நாம் தொடர்ந்து செல்ல வேண்டும். இந்தக் கடினமான காலங்களில் நீங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க வேண்டும். என்னை நம்புங்கள், இந்த இருண்ட சுரங்கப்பாதையின் முடிவில் ஒர் ஒளி தெரிகின்றது” என்று மாகாண முதல்வர் டக் போர்ட் கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். 


Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.