Skip to main content

ஒன்றாரியோவில் தொற்று எண்ணிக்கை தொடர் வீழ்ச்சி!

ஒன்றாரியோவில் தொற்று எண்ணிக்கை தொடர் வீழ்ச்சி!

கடந்த 24 மணி நேரத்தில் ஒன்றாரியோவில் கோவிட் 19 கொறோனா நுண்மி தொடர்பான 294 புதிய தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதத்தில் வெளியான நாளாந்த தொற்று எண்ணிக்கையில் இதுவே ஆகக்குறைந்த எண்ணிக்கையாகும்.
நேற்றைய நாள் 346 தொற்றுகள் உறுதி செய்யப்பட்டிருந்தன. இன்று அந்த எண்ணிக்கை 294 ஆக குறைந்துள்ளது. இறுதியாக மார்ச் 31ஆம் திகதி 260 தொற்றுகள் பதிவாகியிருந்தன. ஒன்றாரியோ மாகாணத்தில் நாளாந்த சோதனைகளின் அளவு அதிகரித்திருக்கின்றது. நேற்றைய நாள் மட்டும் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சோதனைகள் நடைபெற்றிருந்தன. கடந்த வெள்ளிக்கிழமை 19,000 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அதோடு இழப்புகளின் எண்ணிக்கையும் கணிசமான அளவு வீழ்ச்சியைக் கண்டிருக்கின்றன. கடந்த 24 மணிநேரத்தில் 35 புதிய இறப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்த புதிய எண்ணிக்கை தொடர்ந்து மாகாணத்தில் இதுவரை 20 ஆயிரத்து 238 தொற்றுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன .இதில் ஆயிரத்து 634 இறப்புகளும் 14 ஆயிரத்து 772 குணமடைந்தோர் எண்ணிக்கையும் அடங்கும்.

 நீண்ட கால பராமரிப்பு இல்லங்கள் தொற்று நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பராமரிப்பு இல்லங்களில் 239 பேர் இந்த நோயினால் பாதிக்கப் பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.