Skip to main content

சேவை வெட்டுகளுக்குத் தயாராகும் நகாராட்சிகள்

  

சேவை வெட்டுகளுக்குத் தயாராகும் நகாராட்சிகள்:  உதவத் தயங்கும் மத்திய, மாகாண அரசுகள்.


தொற்று நோய் தொடர்பான அவசரச் செயற்பாடுகளையடுத்து பல மாநகராட்சிகள் பெரு வருவாய் இழப்பைச் சந்தித்து வருகின்றன. தொடர்ந்து மக்களுக்கான சேவைகளை வழங்கி வருவதில் அவை பெருஞ் சிரமங்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளன. இவை தொடர்பாக மத்திய மாகாணஅரசுகளுக்கு அவசர உதவி கோரி கோரிக்கைகள் விடப்பட்ட போதும் இதுவரை பதில் கிடைக்கவில்லை என்றும் மாநகராட்சி முதல்வர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒன்ராறியோவின் பெரிய நகர மேயர்களின் கூட்டமைப்புத் தவைவரான கல்ப் (Guelph) மாநகர முதல்வர் Com Guthrie    (கம் குத்ரி) கருத்துக கூறுகையில், எமது பற்றக்குறையை நிவர்த்தி செய்ய எம்மால் முடியவில்லை. ஒன்ராறியோ முழுவதும் உள்ள நகராட்சிகள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்கின்றன. அரசாங்கத்தின் இரு மட்டங்களிலிருந்தும் நிதியுதவி பெற வாய்ப்புகள் இல்லையென்றால் பணியாளர்களைக் குறைப்பது குறித்தும் சேவை வெட்டுகளைச் செய்வதைப் பற்றியும் சிந்திக்கின்றன எனத் தெரிவித்துள்ளார். 

போக்குவரத்து சேவை தொடர்பாக ஏப்பிரல் முதல் யூன் வரை 415 மில்லியன் டொலர் வருவாய் இழப்பு கணிக்கப்பட்டுள்ளது. இந்த இழப்புகளை ஈடுகட்டும் வகையில் மத்திய மாகாண அரசுகள் சாதகமாகச் சிந்தித்தாலும் பேச்சுவார்த்தைகள் இழுபட்டு தீர்வை நெருங்க நீண்டகாலமாகும். நாங்கள் மத்திய மாகாண அரசுகளின் சிக்கல்களுக்கிடையே சிக்கியிருக்கின்றோம்.

கடந்த வாரம், ரொரண்ரோ முதல்வர் ஜோன் டோரி, தமது நகராட்சிக்கு நிவாரணம் கிடைக்காதது குறித்து தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். எந்தவொரு உதவியும் வழங்கப்படாவிட்டால், நகரத்தின் சேவைகளைக் குறைத்து 19,500 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டியிருக்கும் என அவர் தெரிவித்திருந்தார்.  




Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

ஓன்டாரியோவில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

ஓன்டாரியோவில் கோவிட்-19 கொறோனா நுன்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இன்று மீண்டும் அதிகரிப்பு நிலை பதிவாகியது. இன்றைய தினம் புதிதாக 511 தொற்றுக்களும் 55 இழப்புக்களும் பதிவாகியது. இந்நிலையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 17119 ஆகவும் இவர்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1249 ஆகவும் உயர்வடைந்தது. நேற்றைய தினம் 421 தொற்றுக்களும், 39 இழப்புக்களும் பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் இந்த அதிகரிப்பு நிலை காணப்படுகிறது. நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கோவிட்19 தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது. ஒன்டாரியோவில் உள்ள 910 நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் கடந்த 24 நேரத்தில் சுமார் 49 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த இல்லங்களில் இருந்து 167 புதிய தொற்றுக்களும் பதிவாகியுள்ளன. அத்துடன், கோவிட்19 தொற்றிற்கு உள்ளானவர்கள் இனம் காணப்பட்டவர்களில் இதுவரை 11,390 பேர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒன்டாரியோவி...