Skip to main content

கோவிட்-19: நூறாவது நாளில் அறுபதினாயிரத்தை தொட்டது கனடா!


கோவிட்-19 கொறோனா நுண்மி பெருந்தொற்றினால் கனடாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அறுபதினாயிரத்தைக் கடந்துள்ளது.

இன்று மதியம் கடந்து ஒரு மணிவரையான புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் இதுவரை சுமார் அறுபதினாயிரத்து அறுநூற்றுப் நாற்பத்தொன்பது (60,649) பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது.

இவர்களில் 25,760 பேர் குணமடைந்தும், 3850பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

ஓன்டாரியோவில் இன்றைய தினம் புதிதாக 370 தொற்றுக்கள் பதிவாகியுள்ளது. தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையில் ஏற்படும் வீழ்ச்சி நிலையானது, மாகாண அரசால் கொறோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வண்ணம் கொண்டுவரப்பட்ட இறுக்க நிலைகளில் தளர்வை கொண்டுவரும் முதற்கட்ட நடவடிக்கைக்கு சாதகமான நிலையைக் காட்டுக்கின்றது.

இன்றைய தினம் பதிவாகிய 84 மரணங்களுடன் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 1359 ஆக உயர்வடைந்தது.

அத்துடன் இன்று பதிவாகிய 370 புதிய தொற்றுக்களுடன் மொத்தம் 17,923 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 12,505 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கையிலும் வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் 1010 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அந்த எண்ணிக்கை 984 ஆக காணப்படுகின்றது.

கனடிய மாகாண, பிரதேச வாயிலாக கோவிட்-19 தொற்றுக்கள் இவ்வாறு காணப்படுகின்றன.



இதேவேளை கனடியச் சிறைகளில் கொறோனா தொற்றுக்களும் அவற்றால் ஏற்படும் உயிரிழப்புக்களும் எண்ணிக்கையில் அதிகரிப்பைக் காட்டுகின்றன.

சிறைச்சாலைகளில் இதுவரை 290 கைதிகளுக்கு கொறோனா தொற்றியதாகவும், 155 பேர் பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிறைச்சாலைகளில் காணப்படும் நெருக்கம் இதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக தெரிவிக்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.