Skip to main content

கோவிட்-19 கனடா: பரவுகையின் வேகம் தணிவு!

இன்று நான்காவது நாளாக, ஒன்டாரியோ மாகாணத்தில் புதிதாக கோவிட்-19 நுண்மித் தொற்றுகைக்கு உள்ளானோரின் எண்ணிக்கையின் வேகம் தணிவடைந்து காணப்படுகின்றது.

இன்று புதன்கிழமை புதிதாக 412 பேருக்கு தொற்று ஏற்பட்டதாகவும், 68 பேர் உயிரிழந்தாகவும் ஒன்டாரியோ மாகாண பிரதான மருத்துவ அதிகாரி டேவிட் வில்லியம்ஸ்( David Williams) தெரிவித்தார்.

அத்துடன், நுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18,722 ஆகவும், இவர்களில் 13,222 பேர் குணமடைந்துள்ளதாகவும் 1485 பேர் மரணித்துள்ளதாகவும் புள்ளிவிபரத் தகவல்கள் காட்டுகின்றன.
 ஒன்டாரியோவில் தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களில் 57 சதவீதமானவர்கள் பெண்களாகும்.

இதேவேளை கொறோனா தொற்றால் ஏற்பட்ட அனர்த்த காலத்தில் ஒன்டாரியோவில்முன்னிலைப் பணியாளர்களாக செயற்பட்ட மருத்துவத் துறையினரில் சுமார் 3013 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களாக ஒன்டாரியோவில் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை முறையே 387 ஆகவும் 370 என பதிவாகியிருந்தது.

ஒன்டாரியோவில் ஒரு நாளில் ஏற்பட்ட ஆகக் கூடுதலான தொற்றுக்களின் எண்ணிக்கையாக கடந்த ஏப்ரல் 25ம் நாள் பதிவான 640 தொற்றுக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரொறண்டோவில் கொறோனா நுண்மித் தொற்றால் இதுவரை 469 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ரொறன்றோவில் கொறோனா பரவுகை உறுதி செய்யப்படுவோரின் இனம், பொருளாதார நிலைமை போன்ற தரவுகளைத் திரட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென மாநகர பொதுச் சுகாதார அதிகாரி மருத்துவர் ஐலீன் டி வில்லா(Eileen De Villa) கூறியுள்ளார்.

இதேவேளை, கனடாவில் கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்று உறுதி செய்யப்பட்டவர்ளின் மொத்த எண்ணிக்கை 63,496 ஆகவும், மரணமானவர்களின் எண்ணிக்கை 4297 ஆகவும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,829 ஆகவும் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

அந்தவகையில், கனடிய மாகாண, பிரதேச வாரியாக பதிவாகியுள்ள கொறோனா தொற்றுக்கள் குறித்த புள்ளி விபரங்கள் இவ்வாறு காணப்படுகின்றது.








Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

ஓன்டாரியோவில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

ஓன்டாரியோவில் கோவிட்-19 கொறோனா நுன்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இன்று மீண்டும் அதிகரிப்பு நிலை பதிவாகியது. இன்றைய தினம் புதிதாக 511 தொற்றுக்களும் 55 இழப்புக்களும் பதிவாகியது. இந்நிலையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 17119 ஆகவும் இவர்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1249 ஆகவும் உயர்வடைந்தது. நேற்றைய தினம் 421 தொற்றுக்களும், 39 இழப்புக்களும் பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் இந்த அதிகரிப்பு நிலை காணப்படுகிறது. நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கோவிட்19 தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது. ஒன்டாரியோவில் உள்ள 910 நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் கடந்த 24 நேரத்தில் சுமார் 49 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த இல்லங்களில் இருந்து 167 புதிய தொற்றுக்களும் பதிவாகியுள்ளன. அத்துடன், கோவிட்19 தொற்றிற்கு உள்ளானவர்கள் இனம் காணப்பட்டவர்களில் இதுவரை 11,390 பேர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒன்டாரியோவி...