கொறோனா நுண்மித் தொற்றின் தாக்கம் இரண்டு ஆண்டுகள் வரையில் நீடிக்கும் எனவும் விரைவில் கட்டுப்படுத்தக் கூடிய சாத்தியங்கள் கிடையாது எனவும் இந்த ஆய்வை மேற்கொண்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் மூன்றில் இரண்டு சனத்தொகையினர் இந்த நோய்க்கு எதிர்ப்புச் சக்தியை ஏற்படுத்திக் கொள்ளும் வரையில் நோயின் தாக்கம் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய்த் தொற்றின் அறிகுறிகள் தென்படாமலேயே ஒருவரிடமிருந்து இந்த நுண்மித் தொற்று பரவக்கூடிய தன்மையுடையது என்பதனாலும், சளிக்காய்ச்சல் போன்றல்லாதது என்பதனாலும் இதனைக் கட்டுப்படுத்துவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் பில்லியன் கணக்கான மக்களை முடக்கி இந்த கொறோனா நுண்மித் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், இந்த பெருந்தொற்றின் தாக்கம் குறைந்தது எதிர்வரும் 2022ம் ஆண்டு வரையில் நீடிக்கும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த உலகளாவிய ரீதியிலான பெருந்தொற்றுப் பரவுகை விரைவில் முடிவுக்குக் வந்துவிடாது என்பதனை உலக நாடுகள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டுமென நிபுணர்களின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த நோய்த் தொற்றானது இடைக்கிடை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதனை புரிந்து கொண்டு அதற்கு மக்கள் ஆயத்த நிலையில் இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வந்த போதிலும், இந்த ஆண்டில் சிறியளவிலான தடுப்பூசிகளே பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் என்றும் மினசோட்டா பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Key recommendations from the report:
- States, territories, and tribal health authorities should plan for the worst-case scenario (which involves a large second peak of cases in the fall of 2020), including no vaccine availability or herd immunity.
- Government agencies and healthcare delivery organizations should develop strategies to ensure adequate protection for healthcare workers when disease incidence surges.
- Government officials should develop concrete plans, including triggers for re-instituting mitigation measures, for dealing with disease peaks when they occur.
- Risk communication messaging from government officials should incorporate the concept that this pandemic will not be over soon and that people need to be prepared for possible periodic resurgences of disease over the next 2 years.
CIDRAP அறிக்கையின் முழுவடிவம் பின்வரும் இணைப்பில் தரப்பட்டுள்ளது.COVID-19: The CIDRAP Viewpoint




Comments
Post a Comment