Skip to main content

ஒன்டாரியோவில் கொறோனா தொற்று அதிகரிப்பு!

ஒன்டாரியோ மாகாணத்தில் கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்ட 427 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டனர்..

இது நேற்று அடையாளம் காணப்பட்ட 304 தொற்றுக்களில் இருந்து 1.9 சதவீத அதிகரிப்பாக காணப்படுகின்றது.

இந்நிலையில் ஒன்றாரியோவில் கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 384 ஆக பதிவாகியுள்ளது.

இவர்களில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான 15 இழப்புக்களுடன் ஒன்றாரியோவில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து ஐந்தாக(20005) அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரில் 70 சதவீதமானவர்கள் நீண்டகால மருத்துவ பராமரிப்பு இல்லங்களில் தங்கியிருந்த முதாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் தொற்றுக்குள்ளாகியுள்ளோரில், இதுவரை 17 ஆயிரத்து 898 பேர் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை மாகாண அரசால் கொண்டுவரப்பட்ட அவசரகால நிலைப் பிரகடணம் மே 29 வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், உணவகங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாற்றம் போன்ற வர்த்தக நடவடிக்கைகள் இந்த வாரங்களில் ஆரம்பிக்கப்படாது என்று கூறப்படுகிறது.

எனினும், தொற்றைக் கட்டுப்படுத்தும் வண்ணம் முன்னர் கொண்டுவரப்பட் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டுவரும் நிலையில், பொருளாதார செயற்பாடுகளின் முதற்கட்டம் மீண்டும் ஆரம்பமாகிறது.

சமூக இடைவெளி பேணல், சுகாதாரம் பேணல் போன்றவற்றைக் கடைப்பிடித்து மக்கள் செயற்படவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் கனடாவில் கொறோனா தொற்றால் இதுவரை 78 ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களில் 5 ஆயிரத்து 994 பேர் மரணித்துள்ளதாகவும், 39 ஆயிரத்து 521 பேர் குணமடைந்தும் உள்ளதாக புள்ளிவிபரத் தகவல்கள் காட்டுகின்றன.


Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.