ஒன்றாரியோவில் கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றால் கடந்த 24 மணிநேரத்துள் 340 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கையானது சராசரியான நாளார்ந்த அதிகரிப்பு வீதத்தில் குறைவாக 1.5 சதவீதமாக பதிவாகியுள்ளது.
இந்நிலையில், ஒன்றாரியோவில் கொறோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கையானது 22 ஆயிரத்து 653 ஆக அதிகரித்துள்ளது.இவர்களில் 17 ஆயிரத்து 360 பேர் குணமடைந்தும் 1881 பேர் மரணித்தும் உள்ளனர்.
மேலும் தொற்றுக்குள்ளானவர்களில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள 171 பேருடன் மொத்தமாக 934 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை தொற்றால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையில், 62.8 சதவீதமானவை ரொறண்டோ பெரும்பாகத்திலும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment