Skip to main content

செப்ரெம்பர் வரை ஒன்டாரியோ பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும்!


ஒன்டாரியோ மாகாண பள்ளிக்கூடங்கள் எஞ்சியுள்ள  இக்கல்வியாண்டு(2019-2020) முழுவதும் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் நலன், கொறோனா தொற்றில் இருந்து அவர்களை பாதுகாத்தல் உள்ளிட்ட காரணங்களை முதன்மையாகக் கொண்டு இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக சற்று முன்னர் சட்டசபை வளாகத்தில் மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் செய்தியாளர்களிடம் கூறினார்.

கோவிட்-19 கொறோனா நுண்மி பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் வண்ணம் மாகாண அரசால் முன்னெடுக்கப்பட்ட அவசரகால நிலையை அடுத்து மார்ச் இரண்டாம் வாரம் முதல், அரச நிதியின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன.

இந்நிலையில் பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் செயற்பாடு தொடர்பில் முதல்வர் டக் ஃபோர்ட்டும் மாகாண கல்வி அமைச்சர் ஸ்ரீஃபென் லெச்சோ இன்று செய்தியாளர் சந்திப்பை நடத்தினர்.

கொறோனா தொற்றுக் குறித்து சுகாதாரத் துறையினருடன் மேற்கொண்ட ஆலோசனைக்கு அமைவாக எஞ்சியுள்ள இக்கல்வியாண்டு வரை பள்ளிக்கூடங்களை மூடுவது என்று முடிபு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மார்ச் பிறேக்கை உள்ளடக்கி மூன்று வாரங்கள் மூடப்படுமென ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட போதிலும், பின்னைய அறிவிப்பின் பிரகாரம், இரண்டு மாதங்களுக்கும் அதிகமாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன.

எனினும் இணைய வழிக் கல்விச் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறும் என்று கல்வியமைச்சர் லெச்சோ கூறினார்.

அடுத்த கல்வியாண்டுக்கான அறிவிப்பு ஜூன் இறுதிக்குள் வெளியிடப்படும் என்று கூறிய அவர், இவ்வாண்டுக்கான மாணவர்களின் தேர்ச்சி நிலை அறிக்கைகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

ஓன்டாரியோவில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

ஓன்டாரியோவில் கோவிட்-19 கொறோனா நுன்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இன்று மீண்டும் அதிகரிப்பு நிலை பதிவாகியது. இன்றைய தினம் புதிதாக 511 தொற்றுக்களும் 55 இழப்புக்களும் பதிவாகியது. இந்நிலையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 17119 ஆகவும் இவர்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1249 ஆகவும் உயர்வடைந்தது. நேற்றைய தினம் 421 தொற்றுக்களும், 39 இழப்புக்களும் பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் இந்த அதிகரிப்பு நிலை காணப்படுகிறது. நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கோவிட்19 தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது. ஒன்டாரியோவில் உள்ள 910 நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் கடந்த 24 நேரத்தில் சுமார் 49 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த இல்லங்களில் இருந்து 167 புதிய தொற்றுக்களும் பதிவாகியுள்ளன. அத்துடன், கோவிட்19 தொற்றிற்கு உள்ளானவர்கள் இனம் காணப்பட்டவர்களில் இதுவரை 11,390 பேர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒன்டாரியோவி...