ரொறண்டோவில் இரட்சண்ய சேனை(The Salvation Army) தொண்டு அமைப்பால் நடத்தப்படும் பெண்களுக்கான தங்ககம்(women's shelter) ஒன்றில் 17 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக இன்று அறிவிக்கப்பட்டது.
கீல்ஸ் ஸ்றீட்க்கு அருகில் டன்டாஸ் ஸ்றீட் வெஸ்ட்டில் உள்ள Evangeline தங்ககத்தில் இரண்டு பணியாளர்கள் உள்ளிட்ட 17 பேருக்கு இவ்வாறு தொற்று ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ரொறண்டோவில் உள்ள இவ்வாறான தங்ககங்களில், இதுவரை 283 பேருக்கு தொற்று ஏற்பட்டதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
இதேவேளை கோவிட்-19 கொறோனா நுண்மி தொற்றுகையால் ரொறண்டோவில் இதுவரை 7557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் கடந்த 24 மணிநேரத்துள் குணமடைந்த 148 பேருடன் மொத்தமாக 5340 பேர் குணமடைந்தனர். அத்துடன் இதுவரை 589 பேர் கொறோனா தொற்றால் மரணித்தும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment