Skip to main content

கோட்டபாயவின் பிரிவினைவாத தந்திரோபாயம் கைவிடப்பட வேண்டும்!

பிரிவினைவாதத்தை தூண்டி ஆட்சி புரியும் தந்திரோபாயத்தை கோட்டாபய ராஜபக்ச கைவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

அரச அதிபர் கோட்டாபய ராஜபக்ச ஸ்ரீலங்காவில் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதாகவும் வன்முறைகளை இல்லாதொழிப்பதாகவும் கூறி ஆட்சி பீடம் ஏறினார். எனினும் கோவிட்-19 கொறோனா நுண்மி பெரும்பரவுகை அனர்த்தத்தை பயன்படுத்தி எதேச்சாதிகாரத்தை பலப்படுத்திக்கொள்ளும் முனைப்புக்களில் தீவிரம் காண்பித்து வருகின்றார். குறிப்பாக சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே பிரிவிணையை ஏற்படுத்தி வன்முறைகளை அரங்கேற்றும் நடவடிக்கைகளிலேயே சிரத்தை காட்டி வருகின்றார்.

பிரிவினைவாதத்தை பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள பயன்படுத்தும் யுக்தியை கைவிடுமாறு மேற்குலக நாடுகளின் ஜனநாயக அரசாங்கங்கள் கோட்டபாயவை வலியுறுத்த வேண்டும் என்று International Policy Digest க்கு ஊடகவியலாளர் ஜே.எஸ்.திஸ்ஸநாயகம் எழுதிய பத்தியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரச அதிபர் தேர்தலின் போது தமிழ் முஸ்லிம் சிறுபான்மை தீவிரவாதிகளிடமிருந்து சிங்கள பெரும்பான்மை சமூகத்தை பாதுகாக்கும் பாதுகாவலன் என்ற அடிப்படையில் பிரச்சார நகர்வுகளை முன்னெடுத்து அதில் வெற்றியும் பெற்றிருந்தார்.

கோட்டாபாய ராஜபக்சவின் பிரிவினைவாத பிரச்சாரம் அவருக்கு வெற்றி வாகை சூட்டு வித்த போதிலும், சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் பகுதிகள் அனைத்திலும் தோல்வியைத் தழுவ நேரிட்டது.

கொறோனா நுண்மி பரவுகையை பயன்படுத்தி பாரியளவிலான கைதுகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா உள்ளிட்ட சில நாடுகள் மேற்கொள்வதாகவும், இது அடிப்படை மனித உரிமைகளை மீறும் வகையிலானது ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமை ஆணையாளர் மிச்ஷேல் பச்லெட் (Michelle Bachelet) அண்மையில்  சுட்டிக்காட்டியிருந்தார்.

கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையிலான செயற்பாடுகளில் தற்போதைய அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது, குறிப்பாக மாற்றுக் கருத்துக்களை வெளியிடும் தரப்பினர் தடுக்கப்படுகின்றனர்.

அரசாங்கத்தை விமர்சனம் செய்து சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்யும் ஊடகவியலாளர்கள் அநேக சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டும் வேறும் வழிகளிலும் அடக்குமுறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

Journalist J.S.Tissainayagam
கொறோனா நுண்மித் தொற்று தொடர்பில் தகவல்களை வெளியிட்ட சில மருத்துவர்கள் உள்ளிட்டவர்கள் கூட பல்வேறு வழிகளில் நெருக்குதல்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்று ஊடகவியலளார் ஜே.எஸ்.திஸ்ஸநாயகம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா அரசாங்கம் ஊடகவியலாளர், மனிதநேயச் செயற்பாட்டாளர்களை அடக்க பயன்படுத்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மார்ச் 2008ம் ஆண்டு கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் அழுத்தங்களில் மத்தியில் மே 2010ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

ஓன்டாரியோவில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

ஓன்டாரியோவில் கோவிட்-19 கொறோனா நுன்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இன்று மீண்டும் அதிகரிப்பு நிலை பதிவாகியது. இன்றைய தினம் புதிதாக 511 தொற்றுக்களும் 55 இழப்புக்களும் பதிவாகியது. இந்நிலையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 17119 ஆகவும் இவர்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1249 ஆகவும் உயர்வடைந்தது. நேற்றைய தினம் 421 தொற்றுக்களும், 39 இழப்புக்களும் பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் இந்த அதிகரிப்பு நிலை காணப்படுகிறது. நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கோவிட்19 தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது. ஒன்டாரியோவில் உள்ள 910 நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் கடந்த 24 நேரத்தில் சுமார் 49 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த இல்லங்களில் இருந்து 167 புதிய தொற்றுக்களும் பதிவாகியுள்ளன. அத்துடன், கோவிட்19 தொற்றிற்கு உள்ளானவர்கள் இனம் காணப்பட்டவர்களில் இதுவரை 11,390 பேர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒன்டாரியோவி...