ஒன்றாரியோவில் கடந்த 24 மணிநேரத்தில் கோவிட்-19 கொறோனா நுண்மித் பெருத்தொற்றால் பாதிக்கப்பட்ட 344 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டனர்.
இத்துடன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,210 ஆக உயர்வடைந்தது. இவர்களில் 77 சதவீதமான 20,983 பேர் குணமடைந்துள்ளனர். இதேவேளை பிந்திய 41 இழப்புக்களுடன் இதுவரை 2275 பேர் உயிரிழந்துள்ளனர்.
இருபதாயிரம் பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடிய ஆற்றல் கொண்ட ஒன்றாரியோவில் நாளார்ந்தம் பதினாறாயிரம் பரிசோதனைகள் என்ற இலக்கு அனேக நாட்களில் எட்டப்படுவதில்லை.
இருந்த போதும் கடந்த மே 8ம் நாள் மேற்கொள்ளப்பட்ட 19,834 பரிசோதனைகளுக்கு அடுத்ததாக, நேற்றைய தினம் 18,525 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு;ள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹமில்டன் மற்றும் ரொறண்டோ பெரும்பாகத்திற்குட்பட்ட 3276 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒன்றாரியோவின் ஏனைய பகுதிகளில் கிசிச்சை பெற்று வருவபவர்களின் மொத்த எண்ணிக்கை 721 ஆகக் காணப்படுகின்றது.

Comments
Post a Comment