ஒன்றாரியோவில் கோவிட்-19 கொறோனா நுண்மி பரவுகையானது 26 ஆயிரம் எண்ணிக்கையை எட்டுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 404 புதிய தொற்றுக்கள் பதிவாகியுள்ள நிலையில், இதுவரை 25 ஆயிரத்து 904 தொற்றுக்கள் இனம் காணப்பட்டுள்ளன.
இவற்றுள் நேற்று பதிவான 29 இழப்புக்களுடன் உயிரிழந்துள்ளோரின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 164 ஆக உயர்வடைந்துள்ளது. இவற்றில் 75 சதவீதமானவை நீண்டகால மருத்துவப் பராமரிப்பு இல்லங்களில் நிகழ்ந்தவை என்று தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் தொற்றுக்குள்ளாகியுள்ளோரில் 76 சதவீதமான 19 ஆயிரத்து 698 பேர் குணமடைந்துள்ளதாகவும் பொதுச் சுகாதார அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஒன்றாரியோவில் நாளார்ந்தம் பதினாறாயிரம் பரிசோதனைகளை நடத்துவதற்கான இலக்கு முன்வைக்கப்பட்டுள்ள போதும், அவை அனேகமாக எட்டப்படுவதில்லை.
நேற்றைய தினம் 8,107 பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகிறது.
கனடாவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள குபெக்கில், கடந்த 24 மணிநேரத்தில் 573 புதிய தொற்றுக்கள் இனம் காணப்பட்டன. இந்நிலையில் அங்கு தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 987 ஆக உயர்வடைந்தது.
அத்துடன் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்த 85 பேருடன், இதுவரை 4 ஆயிரத்து 69 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கனடாவில் கோவிட்-19 தொற்hல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்து 677 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் மரணமானோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 600 ஆக அதிகரித்துள்ளது.

Comments
Post a Comment