ஒன்றாரியோவில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான 412 கோவிட்-19 கொறோனா நுண்மி பெருந்தொற்றுக்களுடன்,
பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,040 ஆக உயர்வடைந்துள்ளது.
இறுதியாக பதிவான 27 இழப்புக்களுடன் இதுவரை 2113 பேர் உயிரிழந்துள்ளதுடன், தொற்றுக்குள்ளானவர்களில் 76.5 சதவீதமான 19,146 பேர் குணமடைந்தும் உள்ளதாக புள்ளிவிபரத் தகவல்கள் காட்டுகின்றன.
இவ்வாறு உயிரிழந்தவர்களி;ல் 62.6 சதவீதமானவர்கள் நீண்டகால பராமரிப்பு மருத்துவ இல்லங்களில் தங்கியிருந்த மூதாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நாளார்ந்தம் இருபதினாயிரம் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான வசதி ஆய்வுகூங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் 11,028 பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகிறது.



Comments
Post a Comment