Skip to main content

ரொறண்டோ பெரும்பாகத்தில் கட்டுப்பாட்டுக்குள் வராத கொறோனா, அவசரகாலச் சட்டம் நீடிப்பு!

ஒன்றாரியோவில் கோவிட்-19 கொறோனா நுண்மி பெருந்தொற்றினால் கடந்த 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 292 என்று மாகாண அரசு அறிவித்தது.
அத்துடன் 32 பேர் உயிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஐந்து நாட்களாக நானூற்றுக்கு மேல் தொற்றுக்கள் காணப்பட்ட நிலையில், கடந்த மூன்று நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை முன்னூற்றுக்கும் குறைவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



ஒன்ராறியோவின் இதுவரை கோவிட் 19 தொற்றால் 26 ஆயிரத்து 483 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 20,372 பேர் குணமடைந்துள்ளதுடன், 2223 நோயாளிகள் இத்தொற்றால் இறந்துள்ளனர்.

இதேவேளை தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுவரும் 3931 பேரில். 78 சதவீதமான 3054 பேர் ரொறண்டோ பெரும்பாகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவருகின்றது.

இவ்வாறே கடந்த ஏப்ரலில் தொற்றுக்குள்ளான ஐந்தாயிரம் பேரில் 52 சதவீதமானவர்களும், மே மாதத்தில் 76 சதவீதமான 6600 பேரும் ரொறண்டோ பெரும்பாகத்தை சேர்ந்தவர்களாக காணப்பட்டனர்.


ரொறண்டோ நகரில் மட்டும் கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,525 ஆகவும், இவர்களில் 7814 பேர் குணமடைந்துள்ளதுடன், 780 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
இந்நிலையில் ரொறண்டோ பெரும்பாகத்தில் கொறோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது குறித்து மாகாண மற்றும் நகரசபை நிர்வாகம் கவனம் செலுத்தி வருகின்றது.

இதேவேளை, ஒன்ராறியோ அரசு கொறோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வண்ணம் மார்ச் இரண்டாம் வாரத்தில் அறிவித்த அவசரகாலச் சட்டத்தை யூன் 9ம் நாள் வரை நீடித்திருப்பதாக இன்று அறிவித்துள்ளது.

யூன் 9 வரை, ஐந்து பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடக் கூடாது என்பதோடு, விளையாட்டு மைதானங்கள் மற்றும் பொது நீச்சல் குளங்கள் மூடப்பட்டிருக்கும் எனவும் மாகாணத்தில் உள்ள உணவகங்கள் உள்ளிருந்து உணவருந்தும் சேவையை வழங்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓன்றாரியோ மாகாணத்தை படிப்படியாகவும் பாதுகாப்பாகவும் மீண்டும் திறக்கத் தொடங்கும் போது, அனைத்து தனி மனிதர்கள் மற்றும் குடும்பங்களின் நலத்தையும் பாதுகாப்பையும் பேணுவதற்காகவே இந்த அவசர உத்தரவுகளை நாங்கள் நீடித்திருக்கின்றோம் என்றும்  ஒன்றாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் இன்று தெரிவித்திருக்கின்றார்.

கனடாவில் இன்று மாலை ஆறு மணிவரையான பதிவுகளின் படி 87,510 பேருக்கு தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளதுடன், இவர்களில் 46,155 பேர் குணமடைந்தும், 6857 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.