Skip to main content

ஒன்றாரியோவில் கொறோனா பரவுகை அதிகரிப்பு



ஒன்றாரியோவில் கோவிட்-19 கொறோனா நுண்மிப் பரவுகை மீண்டும் ஒரு அதிகரிப்பை இன்று பதிவு செய்தது. நாளார்ந்த பரவுகை வீதமானது 1.8 சதவீதத்தால் அதிகரித்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 441 பேர் பரவுகையால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மே 08ம் நாளுக்குப் பின்னர் பதிவான கூடுதலான எண்ணிக்கையாக பொதுச் சுகாதாரத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


நேற்றைய தினம் பதிவான 28 இழப்புக்களுடன் இதுவரை 2100 மரணங்கள் பதிவாகியுள்ளன. இவர்களில் 77 சதவீதமானவர்கள் நீண்டகால பராமரிப்பு மருத்துவ இல்லங்களில் உயிரிழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்றாரியோவி;ல் தொற்றுக்குள்ளாகியுள்ள 24,628 பேரில் 76.2 சதவீதமான 18,767 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை, ரொறண்டோ மிருகக் காட்சிசாலை நாளை சனிக்கிழமை முதல் மீண்டும் பார்வைக்காக திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொறோனா பரவுகையைக் கட்டுப்படுத்தும் வண்ணம் பொதுச் சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலுக்கு அமைய 45 நிமிட நேரம் வாகனங்களில் இருந்த வண்ணம் 3.4 கிலோமீற்றர் சுற்றுலாவை மேற்கொள்ள முடியும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று முதல் இதற்கான நுழைவுச் சீட்டுக்கள் விநிநோகிக்கப்படுகின்றன. கட்டண விபரம் உள்ளிட்ட மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள இந்த இணைப்புக்குள் செல்க.Toronto Zoo

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.