![]() |
| PIC: the weather network |
ஒன்டாரியோ மாகாணத்தை தாக்கவுள்ள துருவ சுழல் காற்று காரணமாக இவ்வாறான மிகக் கடுயைமான குளிருடனான காலநிலை நிலவக்கூடிய சாத்தியங்கள் உண்டு என்று தெரிவிக்கப்படுகின்றது.
நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஒன்டாரியோவில் மிகவும் குளிரான காற்று வீசும் எனவும் ஏனைய பகுதிகளை விடவும் மிகவும் குளிரான வானிலை காணப்படும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வழமையாக ஏப்ரல் மே மாதங்களில் ஒன்றாரியோவில் நிலவி வரும் காலநிலையை விடவும் வித்தியாசமான ஓர் நிலைமையை மக்கள் உணர நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் தென் துருவங்களில் ஏற்படும் தாழமுக்க நிலைமையினால் மிகவும் குளிர்ந்த காற்று உருவாகும் நிலைமையையே துருவ சுழல் என்கின்றோம்.
ஒன்றாரியோவின் சில பகுதிகளில் கடுயைமான குளிரான காலநிலை நீடிக்கும் அதேவேளையில் சில பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்படக்கூடிய சாத்தியங்களும் காணப்படுகின்றது என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.


Comments
Post a Comment