ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம்(Visakhapatnam ) அருகே உள்ள இரசாயன ஆலை ஒன்றில் ஏற்பட்ட விசவாயுக் கசிவால் குழந்தை ஒன்று உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
மூச்சுத் திணறல், எரிவு, மயக்கம் உள்ளிட்ட பாதிப்பால் இதுவரை சுமார் 200 பேர் வரை மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீட்புப் பணிகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விசாகபட்ணம் என்ற கிராமத்தில் இயங்கிவரும் LG Polimers என்ற ஆலையில் உள்ளுர் நேரப்படி இன்று மே 07ம் நாள் அதிகாலை 3.30 அளவில் இந்த வாயுக் கசிவு ஏற்பட்டதாக உள்ளுர்ச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள கிங் ஜோர்ஜ் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்ட மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி , குறித்த சம்பவம் தொடர்பில் முறைப்படியான விசாரணையை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அத்துடன் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சையை வழங்குமாறும் அப்பகுதி ஆட்சியரைக் கோரியுள்ளார்.

Comments
Post a Comment