Skip to main content

ஒன்றாரியோவில் அதிகரித்துச் செல்லும் கோவிட் 19 பரவல் - இன்று 446

ஒன்றாரியோவில் அதிகரித்துச் செல்லும் கோவிட் 19 பரவல்
ஒன்ராறியோவில் செவ்வாய்க்கிழமை 446 புதிய தொற்றுகள் ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரு இளையவர்கள்உட்பட 19 பேர் நேற்று இறந்துள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2345 ஆக அதிகரித்துள்ளது.



ஒன்ராறியோவில் இப்போது 3,932 நோயாளிகள் கண்காணிப்பிலும் மருத்துவமனைகளிலும் உள்ளனர். முற்றிலும் குணமடைந்தோர் 22,484 பேர். ஒன்ராறியோவில் இத்தொற்றால் இதுவரை 28,709 பேர் தாக்கத்துக்குள்ளாகியுள்ளனர்.

திங்கட்கிழமை ஏற்பட்ட அதிகரிப்பில் பெரும்பான்மை தெற்கு ஒன்ராறியோவில் உள்ள விவசாயப் பண்ணைகளில் ஏற்பட்டிருந்தன. சிம்கோ பகுதியில் உள்ள பண்ணைகளில் 120 பேரும் செயின்ட் கதரீன் பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் குறைந்தது 20 பேரும் பாதிக்ப்பட்டுள்ளனர்.  இதுவே இந்த எண்ணிக்கை அதிகரிப்புக்குக் காரணம் எனச் சொல்லப்படுகின்றது. 

நேற்று இறந்தவர்களில்; இருவர் 20 – 39 வயதிற்குட்டோர் ஆவர். இதுவரை ஒன்ராறியோவில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்குட்பட்டவர்களில் 10 பேர்  மட்டுமே இறந்துள்ளனர். 


Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.