பிரிட்டிஸ் கொலம்பியாவின் ஃபிறேசர் சுகாதாரப் பிரிவில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் ஏற்பட்ட கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றுப் பரவைலத் தொடர்ந்து, அப்பள்ளிக்கூடம் தற்காலிகமாக மூடப்பட்டது.
குறித்த பள்ளிக்கூடத்தில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவருக்கு தொற்று உறுதிப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பள்ளிக்கூடம் மூடப்பட்டது.
எனினும் மாணவர்கள் எவருக்கும் தொற்றுப் பரவல் ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜூன் முதலாக பிரிட்டிஸ் கொலம்பியாவில் பள்ளிக்கூடங்கள் மீளத் திறக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் ஓர் துரதிஸ்டவசமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments
Post a Comment