கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றைக் கட்டுப்படுத்தும் வண்ணம் ஒன்றாரியோ மாகாண அரசால் அமுல்ப்படுத்தப்பட்ட அவசரகால நிலைப் பிரகடணம் ஜூலை 15ம் நாள் வரை நீடிக்கப்படுவதாக முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார்.
இன்று காலையில் ஆரம்பமான சட்டசபை அமர்வில் முன்வைக்கப்பட்ட இப்பிரேணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
எனினும் இந்த நீடிப்பானது கொறோனா தொற்றைக் கட்டுப்படுத்த முன்னெடுக்கப்பட்டுவரும் கடைசி நீடிப்பாக இருக்கும் என்று ஃபோர்ட் நம்பிக்கை வெளியிட்டார்.
இதேவேளை இன்றைய தினம் ரொறண்ரோ மற்றும் பீல்ப் பிராந்தியங்களில் மாகாண அரசின் இரண்டாம் கட்ட கட்டுப்பாட்டுத் தளர்வு அமுலுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment