ஒன்றாரியோவில் கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றின் தாக்கம் வெகுவாக குறைவடைந்தது. கடந்த 24 மணிநேரத்தில் பதிவான தொற்றுக்களின் எண்ணிக்கை 182 ஆக காணப்படுகின்றது.
இவ்வாறு நாளார்ந்த தொற்றுக்களின் எண்ணிக்கை தொடர்ந்து விழ்ச்சியடைந்து வருவது மகிழ்ச்சி தரும் ஒன்றாக இருக்கின்றது என்று நலத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
நேற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்ட இந்தத் தொற்று எண்ணிக்கை, மார்ச் 28ம் நாளுக்கு பின்னரான ஆகக் குறைந்த எண்ணிக்கையாகும்.
கடந்;த வாரத்தின் 5 நாள் சராசரியாக நாளாந்த தொற்றுக்களின் எண்ணிக்கை 222 ஆக காணப்பட்டது.
நேற்று வியாழக்கிழமை ஒன்றாரியோவில் 28,335 தனிநபர் சோதனைகளை நடத்திய பின்னரே இந்த புதிய எண்ணிக்கை பற்றிய முடிவுகள் வெளியாயின.
தொற்று எண்ணிக்கையில் ஏற்பட்டுவரும் தொடர் வீழ்ச்சி சாதகமான கூழலை நோக்கி நாம் செல்கின்றோம் என்பதைத் தெரிவிக்கின்றது என்று நலத்துறை அமைச்சர் கிறிஸ்டின் எலியட் தெரிவித்துள்ளார்.
நேற்று இத்தொற்றால் 11 பேர் இறந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து நாட்களுக்கான நாளாந்த சராசரி இறப்பு 14 ஆகும்.
மருத்துவமனைகளல் சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து ஒரு மாத காலமாக வீழ்ச்சியடைந்து வருகிறது. அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 114 பேருடன் தற்போது 527 பேர் சிகிச்கை பெற்று வருகின்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள 114 பேர் 84 பேர் உயிர்காப்பு சாதனத்தின் துணையுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒன்றாரியோவில் இதுவரை 31,726 பேருக்கு தொற்றுக்கள் பதிவாகியுள்ளதுடன் இவர்களில் 82.5 சதவீதமான 26,187 பேர் குணமடைந்தனர். அத்துடன் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2544 ஆக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments
Post a Comment