கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றுக் குறித்து நேற்று 20,822 பரிசோதனைகள் ஒன்றாரியோவின் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவே இம்மாகாணத்தில் நாள் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட அதிகூடிய பரிசோதனையாக அமைகின்றது.
இருபத்தையாயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளும் வல்லமை கொண்ட ஒன்றாரியோவின் ஆய்வகங்களில், கடந்த மே 29ம் நாள் முதன் முதலில் இருபதினாயிரத்தை தாண்டிய 20,640 பரிசோதனை இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் 356 கொறோனா தொற்றுக்கள் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. இத்துடன் ஒன்றாரியோவில் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 29,403 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 78.9 சதவீதமான 23,208 பேர் குணமடைந்துள்ளனர்.
அத்துடன் நேற்றைய தினம் பதிவான 45 இழப்புக்களுடன் கோவிட்-19 தொற்றால் ஒன்றாரியோவில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2357 ஆக அதிகரித்துள்ளது.
இவற்றில் 80 சதவீதமானவை நீண்டகால மருத்துவப் பராமரிப்பு இல்லங்களில் நிகழ்ந்தவையாகும்.
கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3838 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment