கோவிட்-19 கொறோனா நுண்மி பெருந்தொற்று ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் அதிகரித்த நிலையை இன்றைய புள்ளி விபரத் தகவல்கள் காட்டுகின்றன.
கடந்த 24 மணிநேரத்தில் 404 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இத்துடன் மாகாணத்தில் கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 28,263 ஆக அதிகரித்துள்ளது.
பிந்திய 10 இழப்புக்களுடன் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2329 ஆக உயர்வடைந்தது. உயிரிழந்தோரில் 79 சதவீதமானவர்கள் நீண்டகால மருத்துவப் பராமரிப்பு இல்லங்களில் தொற்றுக்குள்ளானோர் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை தொற்றுக்குள்ளானோரில் 78.4 சதவீதமான 22,153 பேர் குணமடைந்தும் உள்ளனர் என்றும், 3,834 பேர் கண்காணிப்பில் மருத்துவ சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
ஒன்றாரியோவில் இருபத்தைந்தாயிரம் பேருக்கு தொற்றுக் குறித்த பரிசோதனை மேற்கொள்ளக்கூடிய வசதிகள் இருப்பினும் நேற்றைய தினம் 14,379 பரிசோதனைகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாளார்ந்தம் பதினாறாயிரம் பரிசோதனைகளை மேற்கொள்வது என்ற இலக்கையும் எட்டவில்லை.


Comments
Post a Comment