Skip to main content

விதி மீறினாரா சுகாதார அமைச்சர் எலியட்?

Pic Credit: CP24

ஒன்றாரியோ சுகாதாரத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட், கோவிட்-19 பரிசோதனை முடிவு அறிவதற்கு முன்னர் மதுபானம் கொள்வனவு செய்ய சென்றமை குறித்து விமர்சனம் வெளியாகியுள்ளது.
ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட், சுகாதார அமைச்சர் எலியட் ஆகியோர் நேற்று புதன்கிழமை கொறோனா தொற்றுப் பரிசோதனை மேற்கொண்டிருந்தனர்.
பிற்பகல் 3 மணிக்கு அவரது பரிசோதனைக்கான நேர ஒதுக்கீடு கொடுக்கப்பட்டிருந்தது. எனினும் அதற்கு முன்னதாக Dupont Street & Spadina Avenue க்கு அருகில் உள்ள மதுபான விற்பனை நிலையத்தில்(LCBO) கொள்வனவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஆதாரம் வெளியாகியுள்ளது.
முன்னதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ஸ்ரிஃபன் லெச்சே மேற்கொண்டிருந்த கோவிட்-19 பரிசோதனை முடிவு, நேற்று பிற்பகல் இரண்டு மணியளவில் வெளியாகியிருந்தது. அதில் அவருக்கு தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் தான் தொற்றுக் குறித்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கவில்லை என்று குறிப்பிட்ட எலியட், மருத்துவ அதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாக நடந்து கொண்டதாக இன்று செய்தியாளரி;ன் கேள்விக்கு அளித்த பதிலில் எலியட் நியாயப்படுத்தி இருந்தார். மேலும் தான் தனிமைப்படுத்தப்பட வேண்டிய தேவை இருந்ததில்லை என்றும் கூறினார்.
அமைச்சர் லெச்சேயுடனான நெருக்கமான ஒருவருக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, முன்னதாக லெச்சே பரிசோதனை மேற்கொண்டார்.
நேற்றைய தினம் முதல்வர் ஃபோர்ட்டும், அமைச்சர் எலியட்டும் பரிசோதனை மேற்கொண்டனர். அனைவருக்கும் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் ஃபோர்ட்டும், எலியட்டும் குயின்பார்க்கில் ஊடகத்துறைச் சந்திப்பில் கலந்து கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.