ஸ்லோவாக்கியாவின்(Slovakia) வடக்கே பள்ளிக்கூடம் ஒன்றில் இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் உப-அதிபர் உயிரிழந்தார். ஸ்லோவாக்கியாவின் Vrutky நகரில் அமைந்துள்ள குறித்த பள்ளிக்கூடத்தின் முன்னாள் மாணவனான 22 வயதான நபரே இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டதாவும், அவர் காவற்துறையின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாகவும் தெரியவருகிறது.
பள்ளிக்கூடத்தின் கண்ணாடியாலான கதவை உடைத்துக் கொண்டு உட்சென்ற நபரை, துணை அதிபர் இடைமறித்த வேளை அவர் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து வகுப்பறை ஒன்றினுள் சென்ற அவரை இடைமறித்த பெண் ஆசிரியர் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவங்களில் உப-அதிபர் உயிரிழந்தார். பெண் ஆசிரியர் ஒருவர், பள்ளிக்கூடப் பணியாளர் ஒருவர் அத்துடன் இரண்டு மாணவர்கள் ஆகியோர் காயமடைந்தனர்.
அங்கு சென்ற காவற்துறையினர் அவரை கைது செய்ய முற்பட்ட வேளையில், காவற்துறையினர் மீது தாக்குதல் நடத்திய வேளையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதன் போது இரண்டு காவற்துறை உத்தியோகத்தர்களும் காயமடைந்தனர்.


Comments
Post a Comment