Skip to main content

திரையரங்குகளுள் உள்வாங்கப்படுவோர் மீதான கட்டுப்பாடுகளில் தளர்வைக் கோரும் சினிப்பிளக்ஸ்!


திரையரங்குகளை மீளத் திறப்பது தொடர்பான கட்டுப்பாடுகளைத் தளர்த்துமாறு சினிப்பிளக்ஸ்(Cineplex) நிர்வாகம் ஒன்ராறியோ அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது.

கோவிட்-19 நுண்மித் தொற்று இறுக்க நிலையில் இருந்து வழமைக்குத் திரும்புதல் தொடர்பான 3ம் கட்டத்தின் போது திரையரங்குகளில் 50 பேர் மட்டும் உரிய பாதுகாப்பு விதிகளுடன் கூடுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.

எனினும் பணியாளர்களின் ஊதியம் உட்பட அனைத்துச் செலவுகளையும் மேற்கொள்வதற்காக வருவாயை ஈட்டுவதற்கு 50 பேரை உள்ளடக்கிய நிலையில், திரையரங்குகளை இயக்குவதன் மூலம் ஈட்டும் வருமானம், இத்தொகையை சமாளிக்க போதுமானதல்ல என்று கனடியத் திரையரங்கச் சம்மேளனத் தலைமை அதிகாரி டன் மெக்ராத் (Dan McGrath) தெரிவித்துள்ளார்.

ஒன்ராறியோ மகாணத்தில் 35 இடங்களில் சினிப்பிளக்ஸ் திரையரங்குகள் மீளத் திறந்தபோதும் வருவாய் இழப்புடனேயே அவை இயங்குகின்றன.

கொறோனா நுண்மித் தொற்றுநோய் காரணமாக பராமரிப்புச் செலவு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுவரை 130 ஊழியர்களை சினிப்பிளக்ஸ் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.

திரையங்குகள் குறைந்த பட்ட இலாபத்துடனாவது இயங்க அனுமதிக்க வேண்டும் என்று டன் மெக்ராத் கேட்டுள்ளார். எனினும் ஒன்ராறியோ அரசு இந்தக் கோரிக்கைக்கு இதுவரை அரசு பதில் வழங்கவில்லை.

நோவா ஸ்கோஷியாவில் திரையரங்குகளில் உள்ள இருக்கைககளின் எண்ணிக்கையில் 50 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். சஸ்கற்றுவானில் இது 30 சதவீதமாக அனுமதிக்கப்படுகிறது.

இதேவேளை, கனடாவின் Cineplex  நிறுவனத்தை பிரித்தானியாவைச் சேர்ந்த Cineworld Group PLC நிறுவனம் இவ்வாண்டின் ஆரம்பத்தில் 2.8 பில்லியன் டொலருக்கு கொள்வனவு செய்ய இருந்த போதும், பின்னர் இந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டது.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.