ஒன்ராரியோ மாகாண பொதுச் சுகாதாரத் துறையின் தலைவர் மருத்துவர் பீற்றர் டொன்லீ (Peter Donnelly), தனது பொறுப்பில் இருந்து நிரந்தரமாக விலகுவதாக இன்று அறிவித்தார்.
கோவிட்-19 கொறோனா நுண்மிப் பெருந்தொற்றுக் காலத்தில் பெரும்பங்காற்றிய அவருக்கு ஏற்பட்டுள்ள இருதய நோய் தொடர்பாக அறிகுறி காரணமாக, இந்த முடிபை எடுத்துள்ளதாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்தரை ஆண்டுகளாக சிறப்பான செயற்பட்டு வந்த அவர் சுகயீனம் காரணமாக, கடந்த ஏப்ரலில் தான் பதவி விலகும் அறிவிப்பை வெளியிட இருந்த போதும், கோவிட்-19 காரணமாக நிலவிய அசாதாரண நிலையை கருத்திற் கொண்டு தன்னால் இயன்றளவு கடமையை ஆற்றி வந்ததாக டொன்லீ குறிப்பிட்டார்.
எனினும் முழுமையான சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளும் வண்ணம் குடும்பத்தினருடன், பிரித்தானியா செல்லவுள்ள நிலையில் தனது பொறுப்பில் இருந்து நிரந்தரமான விலகும் முடிபை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஒன்ராரியோ மாகாண பொதுச் சுகாதாரத்துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு மருத்துவர் கொலீன் ஹைகரை(Colleen Geiger )சபை கோரியுள்ளது.


Comments
Post a Comment