ஒன்ராரியோவில் கோவிட்-19 நுண்மித் தொற்றுக்கள் தொடர்பான 21,581 நாளார்ந்தப் பரிசோதனையில் புதிதாக 33 பேர் அடையாளம் காணப்பட்டனர். இறப்புக்கள் எதுவும் பதிவாகவில்லை.
கடந்த மார்ச் 18 முதல் பரிசோதனைகளில் அடையாளம் காணப்பட்டு வந்த நாளார்ந்த தொற்றுக்களின் எண்ணிக்கையில் மிகக் குறைந்தளவான பதிவாக காணப்படுகின்றது.
இத்துடன் ஒன்ராரியோவில் தொற்றால் அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 40,194 ஆக அதிகரித்தது. எனினும் இவர்களில் 90.7 சதவீதமான 36,456 பேர் குணமடைந்தும் 2786 பேர் இதுவரை உயிரிழந்தும் உள்ளனர்.

Comments
Post a Comment