Skip to main content

எல்.ரீ.ரீ மீதான தடையை பிரித்தானியா நீக்கக்கூடாது– ஸ்ரீலங்கா கோரிக்கை

 

2001 ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு பிரித்தானிய அரசினால் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு மறுத்த பிரித்தானிய அரசின் செயல் தவாறனது என்று பிரித்தானியாவின் Proscribed Organizations Appeal Commission எனப்படும் அந்நாட்டின் நீதித்துறை ஆணையம் ஒன்று நேற்று அறிவித்தது.


தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு பிரித்தானிய உள்துறை அலுவலகத்திடம் நாடு கடந்த தமிழீழ அரசு முன்வைத்த கோரிக்கையை, 2019 ஆம் மார்ச் 08ம் நாள் பிரித்தானிய அரசு நிராகரித்தது.

இதனைத் தொடர்ந்து உள்துறை அலுவலகத்தின் இந்த முடிவுக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசு, பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பான மேன்முறையீட்டு ஆணைக்குழுவிடம் முறையிட்டிருந்தார்கள்.

விசாரணையை மேற்கொண்ட ஆணையம் பிரித்தானிய உள்துறைச் செயலாளரின் செயல் குறைபாடுடையதென நேற்று ஒக்டோபர் 21ம் நாள் வெளியிட்ட 38 பக்க தீர்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் ஆணையகத்தின் தீர்ப்புத் தொடர்பில் பதில் அளிக்க பிரித்தானிய உள்துறை அலுவலகத்துக்கு 28 நாட்கள் கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உள்துறை அலுவலகம் தனது முடிபை மீள்பரிசீலனை செய்து தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பிரித்தானியாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க மறுக்கும் பட்சத்தில், ஆணையகம் பிரித்தானிய நாடாளுமன்றம் ஊடாக தடையை நீக்க சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக சட்டவாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரித்தானியா நீக்கக் கூடாது என்று இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.

தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் மேன்முறையீட்டு ஆணைக்குழுவில் இந்த நடவடிக்கைகளுக்கான ஒரு தரப்பாக இலங்கை அரசாங்கம் இல்லாத காரணத்தினால், நேரடியான பிரதிநிதித்துவங்களை மேற்கொள்ள முடியவில்லையாயினும், தொடர்ச்சியாக இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து பொருத்தமான தகவல்களை வழங்குவதன் மூலம் பிரித்தானிய அரசாங்கத்துக்கு இலங்கை அரசாங்கம் உதவிகளை வழங்கியுள்ளது.

தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் திறந்த தீர்ப்பானது மேன்முறையீடு செய்வதற்கு அனுமதிக்கும் அதே வேளையில், மேலதிக விசாரணைகளுக்கும் சந்தர்ப்பங்களை வழங்குவதுடன், பிரிததானியாவில் இடம்பெறும் வழக்கின் முன்னேற்றங்கள் குறித்து இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் நெருக்கமான அவதானங்களை செலுத்தும் என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2009 வடக்கில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிரவாத நடவடிக்கை தொடர்பில் இலங்கை அரசு வெளியிட்டுவரும் செய்திகள் எவ்வித ஆதாரங்களும் அற்றது என்று நாடு கடந்த தமிழீழ அரசினால் மேன்முறையீடு செய்யப்பட்ட மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

ஓன்டாரியோவில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

ஓன்டாரியோவில் கோவிட்-19 கொறோனா நுன்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இன்று மீண்டும் அதிகரிப்பு நிலை பதிவாகியது. இன்றைய தினம் புதிதாக 511 தொற்றுக்களும் 55 இழப்புக்களும் பதிவாகியது. இந்நிலையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 17119 ஆகவும் இவர்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1249 ஆகவும் உயர்வடைந்தது. நேற்றைய தினம் 421 தொற்றுக்களும், 39 இழப்புக்களும் பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் இந்த அதிகரிப்பு நிலை காணப்படுகிறது. நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கோவிட்19 தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது. ஒன்டாரியோவில் உள்ள 910 நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் கடந்த 24 நேரத்தில் சுமார் 49 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த இல்லங்களில் இருந்து 167 புதிய தொற்றுக்களும் பதிவாகியுள்ளன. அத்துடன், கோவிட்19 தொற்றிற்கு உள்ளானவர்கள் இனம் காணப்பட்டவர்களில் இதுவரை 11,390 பேர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒன்டாரியோவி...