Skip to main content

1600 புதிய தொற்றுக்களை எட்டியது ஒன்ராறியோ!

 


ஒன்ராறியோ ஆய்வுகூடங்களில் கடந்த 24 மணிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட 46,671 கோவிட்-19 நுண்மிப் பெருந்தொற்றுப் பரிசோதனைகளில் ஆகக் கூடுதலான எண்ணிக்கையாக 1588 நாளார்ந்த தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டதுடன், 21 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன.

கடந்த மார்ச் முதல் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா  தொற்றுக்குறித்த பரிசோதனைகளில் நாள் ஒன்றில் பதிவான அதிகூடிய தொற்றுக்களாக இது காணப்படுகின்றது.

பீல்ப் பிராந்தியத்தில் 522 பேரும், ரொறன்ரோவில் 450 பேரும், 150 யோர்க் பிராந்தியத்தில் பேரும் இன்றைய நாளார்ந்த தொற்றுக்களுள் உள்ளடங்குகின்றனர்.

பிந்திய நாளார்ந்த தொற்றுக்களுடன் ஒன்ராறியோவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 102,378 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 86,079 பேர் இதுவரை குணமடைந்துள்ளதுடன் 3472 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வண்ணம் எதிர்வரும் திங்கட்கிழமை 23ம் முதல் ரொறன்ரோ, பீல்ப் பிராந்தியங்கள் முடக்க நிலைக்கு கொண்டு செல்லப்படும் என்று மாகாண அரசு அறிவித்துள்ளது.

ரொறன்ரோ நகரின் கொரோனா நிலைமைகள் பிழையான திசையில் நகர்வதாக தாம் கருதுவதாகவும் நோய்ப் பரம்பலை கட்டுப்படுத்த சில கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் நகர முதல்வர் ஜோன் ரோறி சுட்டிக்காட்டியுள்ளார்.

நகரில் கடுமையான சில வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் நோய்வாய்ப்படுவது பொருளாதார பாதிப்புக்களை விடவும் ஆபத்தானது என்பதனை புரிந்து கொள்ள வேண்டுமென ஜோன் ரோறி வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ரொறன்ரோ மற்றும் பீல் பிரதேசங்களில் உடல் பயிற்சி மையங்கள் உட்பட அத்தியாவசியமற்ற வணிக வளாகங்கள் அனைத்தையும்; மூட உத்தரவிட்டுள்ளது.

உணவகங்கள் உள்ளிட்டவற்றில் வாடிக்கையாளர்களுக்கு உள்ளேயும் வெளியமர்வுகளிலும் உணவு பரிமாறுவது தடை செய்யப்பட்டிருந்தாலும் உணவுப் பொதிகள் விற்பனையாவது தொடர்ந்து அனுமதிக்கப்படுகிறது.


Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

ஓன்டாரியோவில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

ஓன்டாரியோவில் கோவிட்-19 கொறோனா நுன்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இன்று மீண்டும் அதிகரிப்பு நிலை பதிவாகியது. இன்றைய தினம் புதிதாக 511 தொற்றுக்களும் 55 இழப்புக்களும் பதிவாகியது. இந்நிலையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 17119 ஆகவும் இவர்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1249 ஆகவும் உயர்வடைந்தது. நேற்றைய தினம் 421 தொற்றுக்களும், 39 இழப்புக்களும் பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் இந்த அதிகரிப்பு நிலை காணப்படுகிறது. நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கோவிட்19 தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது. ஒன்டாரியோவில் உள்ள 910 நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் கடந்த 24 நேரத்தில் சுமார் 49 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த இல்லங்களில் இருந்து 167 புதிய தொற்றுக்களும் பதிவாகியுள்ளன. அத்துடன், கோவிட்19 தொற்றிற்கு உள்ளானவர்கள் இனம் காணப்பட்டவர்களில் இதுவரை 11,390 பேர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒன்டாரியோவி...