ஒன்ராறியோ ஆய்வுகூடங்களில் கடந்த 24 மணிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட கோவிட்-19 நுண்மிப் பெருந்தொற்றுத் தொடர்பான 39,165 பரிசோதனைகளில், 1132 நாளார்ந்த புதிய தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
இந்த எண்ணிக்கையானது ஒன்ராறியோவில் நாள் ஒன்றில் பதிவான அதிகூடிய தொகையாக அமைந்துள்ளது.
இவற்றில் ரொறன்ரோவில் 336 உம், பீல்ப் பிராந்தியத்தில் 258 உம், யோர்க் பிராந்தியத்தில் 114 உம், ஒட்டாவாவில் 78 உம், ஹோல்ட்டனில் 64 உம், ஹமில்டனில் 55 தொற்றாளர்களும் உள்ளடங்குகின்றனர்.
இத்துடன் ஒன்ராறியோவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 82 ஆயிரத்து 825 ஆக உயர்வடைந்தது. இவர்களில் 85.6 சதவீதமான 70 ஆயிரத்து 938 பேர் குணமடைந்துள்ளதுடன், இன்றைய 11 இழப்புக்களுடன் இதுவரை 3220 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள 5,345,001 மொத்தப் பரிசோதனைகளில் 44,572 மாதிரிகள், தற்சமயம் ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.


Comments
Post a Comment