Skip to main content

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய உறுப்பினராக கந்தசாமிப்பிள்ளை சுதாமதி நியமிக்கப்பட்டார்.

 

இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூர் பிரதேச சபையின் புதிய உறுப்பினராக கந்தசாமிப்பிள்ளை சுதாமதி நியமிக்கப்பட்டுள்ளார். 

நிந்தவூர் பிரதேச சபைத் தேர்தலில். அகில இலங்கை மக்கள் கொங்கிரஸின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களை சுழற்சி முறையில் நியமிப்பது என்று அக்கட்சியின் மத்திய குழு தீர்மானித்து இருந்தது. அதற்கமைவாகவே சுதாமதி நியமிக்கப்பட்டுள்ளார்.

நிந்தவூர் பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் கொங்கிரஸின் உறுப்பினராக கடந்த டிசம்பர் 08ம் நாளன்று அரச வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி  நேற்று புதன்கிழமை முற்பகல் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் முன்னிலையில் சுதாமதி சத்தியப் பிரமாணம் செய்தார்.

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் காரியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள், செயலாளர் ஆகியோர்களும் கலந்து கொண்டார்.

நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தை சேர்ந்த சுதாமதி அந்த பிரதேசத்தின் அபிவிருத்தி, கல்வி மேம்பாடு உள்ளிட்டவைகளில் கூடுதல் கவனத்தை செலுத்துவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நிந்தவூர் பிரதேசம் முஸ்லிம், தமிழ் மக்களின் ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து கொண்டிருக்கின்றது. 

நீண்ட காலமாக தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையில், இங்குள்ள தமிழர்களை கௌரவிக்கும் வகையில் பட்டியல் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்த சுதாமதியை பிரதேச சபையின் உறுப்பினராக நியமித்துள்ளமை மூலமாக தமிழ், முஸ்லிம்களுக்கு இடையிலான உறவு இன்னும் பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு, தமிழ் மக்களும் இந்த நியமனத்தை தங்களுக்குரிய கௌரவமாக கருதி இன உறவினை மேலும் பலப்படுத்துவதற்கு உழைக்க வேண்டும் என்று இந்நிகழ்வில் உரையாற்றிய நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தெரிவித்தார்.


தன்னுடைய பெயரை பட்டியல் வேட்பாளராக இணைத்துக் கொண்ட போதிலும், இவ்வாறு ஒரு கௌரவத்தை அகில இலங்கை மக்கள் கொங்கிரஸ{ம், தவிசாளரும், மத்திய குழுவும் வழங்கியமைக்கு என்றும் நன்றியுடையவளாகச் செயற்படுவேன் என்று சுதாமதி தெரிவித்தார்.


Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

ஓன்டாரியோவில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

ஓன்டாரியோவில் கோவிட்-19 கொறோனா நுன்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இன்று மீண்டும் அதிகரிப்பு நிலை பதிவாகியது. இன்றைய தினம் புதிதாக 511 தொற்றுக்களும் 55 இழப்புக்களும் பதிவாகியது. இந்நிலையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 17119 ஆகவும் இவர்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1249 ஆகவும் உயர்வடைந்தது. நேற்றைய தினம் 421 தொற்றுக்களும், 39 இழப்புக்களும் பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் இந்த அதிகரிப்பு நிலை காணப்படுகிறது. நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கோவிட்19 தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது. ஒன்டாரியோவில் உள்ள 910 நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் கடந்த 24 நேரத்தில் சுமார் 49 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த இல்லங்களில் இருந்து 167 புதிய தொற்றுக்களும் பதிவாகியுள்ளன. அத்துடன், கோவிட்19 தொற்றிற்கு உள்ளானவர்கள் இனம் காணப்பட்டவர்களில் இதுவரை 11,390 பேர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒன்டாரியோவி...